வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சமந்தாவை ஐட்டம் என்று கிண்டலடித்த ரசிகர்.. அதற்கு அவர் கொடுத்த பதிலடியை பாருங்க

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடிய ஓ சொல்றியா மாமா பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

மற்ற நடிகைகள் 10 படங்களில் நடித்து சம்பாதிக்கும் பணத்தை ஒரே பாட்டில் அள்ளிக்கொண்டு சென்று விட்டார் சமந்தா. அதுமட்டுமில்லாமல் இந்த ஒரே ஒரு பாடலில் நடனமாடிய தன் மூலம் புஷ்பா படத்தின் நாயகி சமந்தா தான் எனுமளவுக்கு ஒரு இமேஜை ஏற்படுத்தி ரஷ்மிகா மந்தனாவை டம்மி செய்துவிட்டார்.

சமந்தா சமீபத்தில் தான் தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். சமந்தாவுக்கு டிவோர்ஸ் ஆனபிறகு சமூக வலைதளங்களில் அவர் எந்த பதிவு போட்டாலும் அதற்கு நெகட்டிவ் கமெண்டுகள் அதிகம் வந்துகொண்டிருந்தன.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையில் தெளிவாக இருந்த சமந்தா அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் கைவசம் நிறைய படங்கள் வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

samantha
samantha

கொஞ்ச நாட்களாகவே நடிகர் நடிகைகள் சமூக வலைதளங்களில் தங்களிடம் அத்துமீறி பேசும் ரசிகர்களை நோஸ்கட் செய்யும் வகையில் ரிப்ளை கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் சமந்தாவை ஒரு ரசிகர் டுவிட்டர் பக்கத்தில் சீண்டி உள்ளார்.

சமந்தா விவாகரத்து செய்யப்பட்ட இரண்டாம்தர ஐட்டம், அவர் ஒரு ஜெண்டில்மேன் இடம் இருந்து சுமார் 50 கோடி வரி இல்லாத பணத்தை கொள்ளை அடித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த சமந்தா உங்கள் ஆன்மாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் (God bless your soul) என குறிப்பிட்டுள்ளார்.

Trending News