செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய்க்கு மனைவியாக நடிக்கும் அழகு நடிகை.. வில்லியாக களமிறங்கும் சமந்தா

தளபதி விஜய் இப்போது வாரிசு படத்தில் படு பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி பைடிபைலி இந்த படத்தை எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். வாரிசு படம் வரும் பொங்கலன்று ரிலீசாக இருக்கிறது.

விஜய் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருடைய 67 வது திரைப்படத்தை பற்றி அடிக்கடி தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவருடைய லேட்டஸ்ட் ஹிட்டான விக்ரம் திரைப்படம் தான்.

Also Read: சூட்டிங்கிற்கு முன்பே பல கோடிகளை அள்ளிய தளபதி 67.. இது தான் வியாபார தந்திரமா!!

தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்குகிறார். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டது. பிரித்விராஜ், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கின்றனர். இப்போது லோகேஷ் விஜயின் 67 வது படத்தின் ப்ரீ-ப்ரொடக்சன் வேளையில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு விஜயும் , த்ரிஷாவும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். ஏற்கனவே கில்லி , திருப்பாச்சி, குருவி, ஆதி என இந்த வெற்றி கூட்டணி ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறது.

Also Read: உலகநாயகனின் அடுத்த டார்கெட் தளபதி.. கூட்டணியில் சேர்ந்த இங்கிலீஷ் பேசும் இயக்குனர்

இப்போது தளபதி 67 ல் விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்கிறார். சமந்தா மற்றும் விஜய் மெர்சல், தெறி என இரண்டு படங்களில் நடித்திருக்கின்றனர். சமந்தா இதற்கு முன்பாக தமிழில் விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள திரைப்படத்தில் நெகடிவ் கேரக்டர் பண்ணியிருந்தார்.

இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே பிரபல OTT நிறுவனம் 120 கோடிக்கு வாங்கியிருக்கிறது. மேலும் சேட்டிலைட் உரிமம் மற்றும் ஹிந்தி ரீமேக் உரிமம் என தளபதி 67 இப்போதே 250 கோடிக்கு மேல் கல்லாகட்டிவிட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்குகிறது.

Also Read: இனி பலான காட்சிகளில் நடிக்க மறுக்கும் சமந்தா.. இதற்கு பின்னால் இப்படி ஒரு சங்கதி இருக்கா

Trending News