திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நயன்தாரா இடத்தை கைபற்றும் ஹீரோயின்.. 2 நடிகைகளையும் பின்னுக்கு தள்ளிய மூன்றாவது நாயகி!

தென்னிந்திய நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டோரின் சம்பளங்கள் 80 கோடிக்கு மேல் உயர்ந்துள்ளன. இதில் விஜய்யின் சம்பளம் மட்டுமே 120 கோடி ஆகும். அந்த வகையில் நடிகைகளின் சம்பளம் 10 கோடிக்கும் குறைவாக தான் உள்ளது. இருந்தாலும் நடிகைகளுக்கு ஹீரோக்களை விட மவுஸ் அதிகம் தான் சொல்ல வேண்டும்.

தற்போதுள்ள காலகட்டத்தில் ஒரு நடிகை திருமணம் செய்து கொண்டாலும், அதன்பின் அவர்களுக்கு அதிக பட வாய்ப்பு உள்ளது. அப்படி அந்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்துக் கொண்டிருப்பவர்கள் தான் நடிகை சமந்தா மற்றும் நயன்தாரா. நடிகை சமந்தா திருமணம் செய்து கொண்ட பின் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

Also Read : செகண்ட் இன்னிங்ஸில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்யத் துடிக்கும் 5 நடிகைகள்.. விஜய், அஜித் உடன் நடிக்க போகும் இளவரசி

பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தெலுங்கில் பேன் இந்தியா மூவியாக ரிலீசான புஷ்பா திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை கிறங்கடித்தார். அதற்குப்பின் சமந்தாவிற்கு மார்க்கெட்டில் சம்பளம் உயர்ந்துள்ளது தான் சொல்ல வேண்டும். விவாகரத்து ஆன நிலையிலும் பல திரைப்படங்களில் சமந்தா நடித்து வருகிறார்.

இதில் முக்கியமாக பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதைகளுக்கு சமந்தா முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதனிடையே சமந்தாவிற்கு ஐந்திலிருந்து ஏழு கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். இவரைப்போலவே நயன்தாராவும் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொண்டார்.

Also Read :நயன்தாரா போல் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. மேடையில் அதிரடியாக பேசிய நடிகை

இருப்பினும் நயன்தாரா தற்போது நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தை ட்ரைபல் ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ள நிலையில், நயன்தாராவிற்கு 10 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். இதனிடையே இணையத்தில் நயன்தாராவா, சமந்தாவா என ரசிகர்கள் சண்டை போட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த லிஸ்டில் 3 மூன்றாவது நடிகையாக பொன்னியின் செல்வன் நடிகை இடம்பெற்றுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்த நடிகை திரிஷா, இத்திரைப்படத்திற்கு முன்புவரை ஒன்றிலிருந்து இரண்டு கோடி வரை மட்டுமே சம்பளமாக வாங்கி இருந்தார். ஆனால் படத்தின் வெற்றிக்குப் பின் திரிஷாவின் சம்பளம் 3 கோடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே தென்னிந்திய நடிகைகளில் முதல் மூன்று இடங்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளாக நயன்தாரா, சமந்தா, த்ரிஷா இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : விசித்திர நோய்க்கு மருந்து இல்லாமல் தவிக்கும் சமந்தா.. எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது

Trending News