நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017 திருமணம் செய்துகொண்டார்கள். தற்போது 4 வருட திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிந்து விட்டார்கள். இதை தொடர்ந்து சமந்தா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அதில் ஒரு பெண் ஒரு முடிவை எடுக்கும் போது அவளது ஒழுக்கம் குறித்து பல கேள்விகள் கேட்கப்படுகிறது. ஆனால் ஒரு ஆண் எடுக்கும் முடிவை யாரும் விமர்சிப்பதில்லை. இதனால் இந்த சமூகம்தான் ஒழுக்கம் இல்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது என குறிப்பிட்டிருந்தார்.
சமந்தாவின் இந்த பதிவிற்கு அறிவுரை கூறியிருந்தார் வனிதா. இங்கு சமூகம் என்று எதுவும் இல்லை, கவலைப்படுவதற்கும் எதுவும் இல்லை, உன்னுடைய வாழ்க்கையை நீ சிறப்பாக வாழ் என குறிப்பிட்டிருந்தார்.
சமந்தா தனியாக ஒரு காஸ்ட்யூம் கடை நடத்தி வருகிறார். இதைத் தவிர பல தொழில்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து உள்ளார் சமந்தா. இதனால் நாகசைதன்யா கொடுத்த ஜீவனாம்சத்தை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்.
அவரைப் பின்தொடர்ந்து வனிதாவும் தற்போது காஸ்ட்யூம் கடையை திறந்துள்ளார். தீபாவளி சமயத்தில் திறந்துள்ள கடையில் வனிதா மற்றும் அவரது அம்மா மஞ்சுளா விஜயகுமார் அணிவது போல் உள்ள உடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது வனிதா குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி வரையில் வனிதா கடையில்தான் இருப்பதாகவும் அனைவரும் வாருங்கள் எனவும் கூறியுள்ளார். சமந்தா மற்றும் வனிதா போன்ற நடிகைகள் தனியாக இருந்து பல விமர்சனங்கள் நடுவிலும் முன்னேறி வருகிறார்கள். விமர்சனங்களைத் தாண்டி, விவாகரத்தை தாண்டி நடிகைகள் இதுபோன்ற முயற்சியில் இறங்கியிருப்பது சற்று வரவேற்கக் கூடியதுதான்.