திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அந்த ஆள பிரேக்கப் செய்யலனா இந்நேரம் செத்திருப்பேன்.. சமந்தாவை கொடுமைப்படுத்திய ஹீரோ யார்?

சமீபத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தங்களுக்குள் திருமண வாழ்க்கை செட்டாகாது என விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த செய்தி கோலிவுட் பாலிவுட் டோலிவுட் என அனைத்து சினிமா பக்கத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நிறைய வதந்திகள் வந்தாலும் இதனால் இருவரும் பிரிந்தனர் என்பது தற்போது வரை தெரியவில்லை.

சமந்தா நாக சைதன்யாவை மட்டும் விரும்பவில்லை. அதற்கு முன்னர் சில நடிகர்களுடன் காதலில் இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். அதுமட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சிகளுக்கு அவர்களுடன் கைகோர்த்து வந்த சம்பவங்கள் எல்லாம் ஏராளம் உள்ளது.

ஏகப்பட்ட பிரேக்கப் சம்பவங்களுக்கு பிறகு தான் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர் பிரபல நடிகர்களுடன் பிரேக்கப் செய்தபோது கொடுத்த பேட்டி ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சமந்தா சொன்ன விஷயம் தான் உச்சகட்ட ஹைலைட்.

சமந்தா அந்த குறிப்பிட்ட பேட்டியில் நல்ல வேளை அவரை பிரேக்கப் செய்துவிட்டேன். அப்படிச் செய்யவில்லை என்றால் இந்நேரம் நான் செத்து இருப்பேன் எனவும் சாவத்திரி அம்மாவுக்கு நடந்த கொடுமைதான் தனக்கும் நடந்து இருக்கும் எனவும் ஓபனாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த பேட்டி கொடுத்து பல வருடங்கள் ஆனாலும் இப்போது தான் அந்த பேட்டி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

அவர் கண்டிப்பாக நாக சைதன்யாவை சொல்லவில்லை என்பது தெரிகிறது. அப்படி இருக்கையில் யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமந்தா மற்றும் சித்தார்த் இருவரும் ஒருகாலத்தில் காதலித்து வந்தனர்.

samantha
samantha

ஒரு வேளை அவரை சொல்லியிருப்பாரோ எனவும் கிளப்பி விட்டு விட்டனர். அதற்கு காரணமும் இருக்கிறது, சமந்தா விவாகரத்து பெற்ற அன்றைக்கு சித்தார்த் ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் போட்டார். அதன்பிறகு அவரது சமந்தாவுக்காக போட வில்லை எனவும் கூறியிருந்தார். அப்போது கண்டிப்பாக அவராகத்தான் இருக்கும் என இணையத்தில் ஒரு பக்கம் கிளப்பி விட்டு விட்டனர். தற்போது இந்த பஞ்சாயத்து பூதாகரமாக வெடித்து வருகிறது.

Trending News