வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விட்ட இடத்தை பிடிக்க எல்லை மீறும் சமந்தா.. மிரள வைக்கும் லிப்லாக், உச்சகட்ட கவர்ச்சி

சமந்தா சமீப காலமாக பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். அதிலும் மையோசிடிஸ் என்ற உடல்நல பிரச்சனை அவரை ஒரு வழி செய்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதையெல்லாம் தாண்டி தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள இவருக்கு அண்மையில் வெளிவந்த சாகுந்தலம் மோசமான தோல்வியை கொடுத்தது.

இருப்பினும் அடுத்ததாக விஜய் தேவரகொண்டா உடன் நடித்திருக்கும் குஷி படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க தற்போது அவர் நடித்து வரும் சிட்டாடெல் என்ற வெப் தொடர் பற்றிய பேச்சு தான் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ராஜ் மற்றும் டிகே இயக்கும் இந்த தொடர் ஹிந்தியில் உருவாகி கொண்டிருக்கிறது.

Also read: வீழ்ந்து விடுவேன் என நினைத்தாயோ.. ஜிம் ஒர்க் அவுட்டில் மிரள விட்ட சமந்தா

ஏற்கனவே ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா கலக்கியிருந்த இந்த வெப் சீரிஸ் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் சமந்தாவுடன் பிரபல நடிகர் வருண் தவான் இணைந்துள்ளார். சமீபத்தில் கூட நடந்த விழாவில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வெப் தொடரில் சமந்தா எல்லை மீறும் அளவிற்கு கவர்ச்சி காட்டி இருக்கிறாராம். அதிலும் லிப் லாக், படுக்கையறை காட்சிகள் ஆகியவை இதில் அதிகமாக இருக்குமாம். இது குறித்து கவலைப்படாத சமந்தா எத்தனை டேக் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என ரொம்பவும் தாராளம் காட்டுகிறாராம்.

Also read: குத்தாட்டம் போடும் அளவுக்கு ஐட்டம் சாங் பாடிய 5 நடிகைகள்.. சமந்தா மார்க்கெட்டை ஏற்றிவிட்ட ஆண்ட்ரியா

இதுதான் இப்போது பெரும் சலசலப்பாக மாறி இருக்கிறது. ஏற்கனவே இவர் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய ஐட்டம் டான்ஸ் பல விமர்சனங்களை உண்டு பண்ணியது. அதனாலேயே இவருக்கு விவாகரத்து ஆனது என்ற ரீதியிலும் பேச்சுக்கள் கிளம்பியது. ஆனால் சமந்தாவோ அதை எல்லாம் காதில் வாங்காமல் தன் வேலையை மட்டுமே பார்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய இடத்தை மீண்டும் பிடிக்க தான் இந்த அளவுக்கு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் உடல் நல பிரச்சனை காரணமாக அவர் இனிமேல் சரிவர நடிப்பில் கவனம் செலுத்த மாட்டார் என வெளிப்படையாகவே பலரும் பேசி வந்தனர். அதை முறியடிக்கும் வகையில் தான் உச்சகட்ட கவர்ச்சியை இறக்கி பலரையும் வாயடைக்க பிளான் போட்டுள்ளார் சமந்தா.

Also read: சமந்தாவை பற்றி பேசி உருகிய நாக சைதன்யா.. விவாகரத்தின் உண்மை காரணம் இதுதானாம்!

Trending News