செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சினிமாவை தாண்டி கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சமந்தா.. அள்ளிக்கொடுக்கும் கார்ப்பரேட் முதலைகள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் அவர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்த காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து இவர் தற்போது சாகுந்தலம், யசோதா, குஷி போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் திரைப்படங்களில் நடிப்பதற்கும் இவர் ஆர்வமாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமந்தா சோசியல் மீடியாவில் எப்போதும் பயங்கர ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் போன்ற பல வகையான போட்டோக்களை அவர் அதில் பதிவிட்டு வருவது வழக்கம். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகும். மேலும் அவர் தன்னுடைய சோஷியல் மீடியாவில் சில கார்ப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்புகள் பற்றியும் விளம்பரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் சமந்தா அழகு சாதனம், உடை, உணவு பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரப்படுத்தி வருகிறார். இதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. மேலும் அவர்கள் சமந்தாவிற்கு கோடிக்கணக்கில் பணத்தை சம்பளமாகவும் கொடுக்கின்றனர்.

இப்படி சமந்தா சினிமாவில் நடித்து சம்பாதிப்பதை காட்டிலும் சோஷியல் மீடியாவில் எக்கச்சக்கமாக பணம் சம்பாதிக்கிறார். வெறும் பேஷன் உள்ளிட்ட பொருட்களின் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அவர் மாதம் மூன்று கோடிக்கும் மேல் பணம் சம்பாதித்து வருகிறார்.

இவர் மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகைகளும் தங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் மதுபானம், அழகுப் பொருட்கள் உள்ளிட்ட பல கம்பெனிகளின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் கோடிக்கணக்கில் கல்லா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News