வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கொஞ்சம் பாத்து பேசுங்க, கடுப்பான சமந்தா.. என்ன மனுசங்கடா நீங்கலாம்

விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்த நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். பாலிவுட்டில் இளம் நடிகரான வருண் தவானுக்கு ஜோடியாக நடிகை சமந்தா சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார்.

நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்த நடித்து வரும் நடிகை சமந்தாஉடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சமீப காலத்தில், நிறைய சவால்களை சமாளித்தார். தற்போது citadel தொடரின் ப்ரோமோஷன் பயங்கரமாக நடந்து வருகிறது.

நாம் 2024ல இருக்கோம்

இந்த நிலையில் சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் சமந்தா. சில படங்கள் சரியாக போகாததற்கான காரணம் கேட்டபோது, “உண்மை தான் நான் கடந்த காலத்தில் சில தவறுகளை செய்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

சில விஷயங்கள் எனக்கு சரியாக அமையவில்லை, தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். மேலும் சமீப காலமாக தன்னை அழகாக சமந்தா வெளிப்படுத்தினாலும், அவர் முகத்தில் சோர்வு தெரிகிறது. மேலும் மிகவும் உடல் எடை குறைந்துள்ளார்.

இந்த நிலையில், கொஞ்சம் உடல் எடையை அதிகரிக்க சொல்லி ஒரு ரசிகர் சொன்னபோது, டென்சன் ஆகிவிட்டார் சமந்தா. அப்போது, அவர், “நான் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கபட்டுள்ளேன். மருத்துவர் அறிவுறுத்தல் படி, உணவு அருந்தி வருகிறேன்.

இந்த பாதிப்புகள், என் உடல் எடையில் மாற்றத்தை ஏற்படுத்தும். கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க, பாத்து பேசுங்க.. நாம் 2024-ல் இருக்கிறோம். அடுத்தவர் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டாதீர்கள்.” என்று கூறியுள்ளார்.

Trending News