செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அருவருப்பாக நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா.. கற்பனை பண்ணவே ஒரு மாதிரி இருக்கே

கடந்த ஒரு மாத காலமாக எல்லா சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டது சமந்தாவின் விவாகரத்து பற்றிய செய்திதான். தற்போது அவர் அந்த நினைவுகளில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கிறார். வெப் தொடர்களிலும் ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார்.

இப்பொழுது சமந்தாவைப் பற்றி மேலும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது. சமந்தா ஹாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அந்த படத்தில் அவர் நடித்திருக்கும் கேரக்டர் ரோல் ஒரு அருவருப்பான, இந்திய கலாச்சாரத்தை கெடுக்கக் கூடிய ஒரு ரோலாக இருக்கிறது.

அந்த ஆங்கில படத்தில் சமந்தா ஓரினச்சேர்க்கையாளராகவும், ஆண்களுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இதற்கு பல கோடி சம்பளங்கள் பேசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சமந்தா நடித்து வெளிவந்த ஃபேமிலி மேன் என்ற வெப் தொடரும் சர்ச்சைகள் நிறைந்ததுதான்.

அது ஒரு வெப் தொடர் என்பதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. விவாதத்துக்கு பின் ஏன் சமந்தா இந்த மாதிரி படங்களை தேர்வு செய்கிறார் என்பது தெரியவில்லை. மேலும் இது ஆங்கில படம் என்பதால் அவர் தைரியமாக ஒத்துக் கொண்டுள்ளார்.

எது எப்படியோ காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப மார்க்கெட் இருக்கும் போதே முடிந்த அளவு கல்லா கட்டி விட வேண்டும் என்று சமந்தா திட்டமிடுகிறார். ஏற்கனவே விவாகரத்துக்குப் பின் ஒரு சில தொழில்களில் முதலீடு செய்து லாபம் பார்த்து வருகிறார் சமந்தா.

இதைத் தவிர இதுபோன்ற மோசமான காட்சிகளில் நடிப்பதின் மூலம் ரசிகர்கள் மத்தியில் சமத்து நடிகை என்ற பெயர் போய், கவர்ச்சி நடிகையாக மாறி விடும். இனி வரும் படவாய்ப்புகளும் கவர்ச்சியான காட்சிகளை காட்டுவதற்கு மட்டுமே இயக்குனர்கள் தேர்வு செய்வார்கள் என்பது போகப்போக புரியவரும்.

Trending News