ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

1.5 கோடி சம்பளத்திற்கு நல்ல கவர்ச்சி காட்டி இருக்காங்க சமந்தா

தென்னிந்திய திரையுலகில் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்கு பின் அடுத்தடுத்த படங்களில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகை சமந்தா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா.

இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சுனில், தனஞ்சேயா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அண்மையில் புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அல்லு அர்ஜூனின் நட்பு காரணமாக புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஓ சொல்றியா என்ற குத்து பாடலுக்கு சமந்தா நடனமாடியுள்ளார். இந்த ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட மட்டும் சமந்தா சுமார் 1.5 கோடி சம்பவம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், வாங்கிய காசுக்கு கவர்ச்சியை குறைவில்லாமல் காட்டியுள்ளார் சமந்தா.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க இந்த பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுளளார். சமந்தா ஆடியே இப்பாடலை லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. புஷ்பா படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. யூடியூப் ட்ரெண்டிங்கில் தற்போது புஷ்பா பட லிரிகல் வீடியோ ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

Trending News