சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இன்ஸ்டாகிராமால் சமந்தாவிற்கு வந்த பிரச்சனை.. இது எல்லாருக்கும் நடக்கிறது தான்

சமந்தா தற்போது படங்களில் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படத்தில் சமந்தா நடித்திருந்தார். இந்நிலையில் பல படங்களில் நடித்து வந்தாலும் சமந்தா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் மூலம் சில விளம்பரங்களில் நடித்த அதன் மூலமும் சமந்தா கல்லா கட்டி வந்தார். இந்நிலையில் சமீபகாலமாக சமந்தாவின் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியானது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

ஏற்கனவே பல படங்களை கைவசம் வைத்துள்ள சமந்தா இதன்மூலம் கவர்ச்சி போட்டோ ஷூட் எடுத்து மேலும் பட வாய்ப்புகளை தேடி வருகிறார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வந்தது. இந்நிலையில் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக சமந்தாவின் ரசிகர்கள் கூறிவந்தனர்.

ஆனால் சமந்தா இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சமந்தாவின் மேனேஜர் தெரிவித்துள்ளார். அதாவது சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறான பதிவுகள் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதை சரி செய்யும் முயற்சியில் தற்போது தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். மிக விரைவில் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் சரி செய்யப்படும் என சமந்தாவின் மேனேஜர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் இவ்வாறு பிரச்சினையை சந்தித்துள்ளது சமந்தா ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் மிக விரைவில் இந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்தவுடன் பழையபடி சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவுகளை வெளியிடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் தற்போது சமந்தா யசோதா, குஷி என பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News