வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அந்த இடத்துல முடி இருந்தா இப்படித்தான்.. தயாரிப்பாளரை பப்ளிக்காக அசிங்கப்படுத்திய சமந்தா

முன்னணி நடிகையாக புகழின் உச்சியில் இருக்கும் சமந்தா எப்போதுமே தைரியமானவர். இவரை சுற்றி எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அதை எல்லாம் அசால்டாக கையாளும் இவர் தற்போது தன்னை பற்றி அவதூறாக பேசியா தயாரிப்பாளர் ஒருவரை பப்ளிக்காக அசிங்கப்படுத்தி இருக்கிறார்.

அதாவது இவர் நடிப்பில் உருவான சாகுந்தலம் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு இப்படம் வசூல் லாபம் பெறவில்லை. அது குறித்து தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சிட்டி பாபு, சமந்தா பற்றி பல அவதூறுகளை அள்ளிவிட்டு இருக்கிறார். அதாவது சாகுந்தலம் படம் சமந்தாவின் திரை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்று அவர் கூறியிருக்கிறார்.

Also read: பிரிந்த கணவரை மறக்க முடியாமல் தவிக்கும் சமந்தா.. லண்டனில் அம்பலமான உண்மை!

அது மட்டுமல்லாமல் தன் உடல் நிலையை காரணம் காட்டியும், அனுதாபத்தை பெறுவதற்காகவும் அழுது கண்ணீர் விட்டு படத்தை ப்ரமோஷன் செய்தார். இப்படி ஒரு மலிவான விளம்பரத்தை செய்ததால் தான் படம் வரவேற்பு பெறவில்லை என்றும் நாக சைத்தன்யாவை அவர் பிரிந்தது பற்றியும் மோசமான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் சமந்தா தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் ஒரு விஷயத்தை அம்பலப்படுத்தி தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது காதில் யாருக்கு அதிகமாக முடி வளரும் என்பது பற்றி கூகுளில் தேடிப் பார்த்தேன். அதில் ஹார்மோன்ஸ் அதிகமாக இருப்பவர்களுக்கு தான் இப்படி இருக்கும் என்று தெரியவந்தது.

Also read: 80 கோடி பட்ஜெட்டில் உருவான சாகுந்தலத்தின் வசூல் லாபமா, நஷ்டமா!. கணக்கு பார்த்தால் தலையே சுத்துது

இது யார் என்றும் நான் யாரை பற்றி சொல்கிறேன் என்பதும் உங்களுக்கு தெரியும் என பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் சமந்தா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்று கூறி வந்தனர். ஏனென்றால் தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு தான் காதில் முடி இருக்கிறது. அதை தான் அவர் மறைமுகமாக இப்படி குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த விவகாரம் தான் தற்போது திரையுலகில் பல்வேறு விதமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. மேலும் தயாரிப்பாளர் மீது சமந்தாவுக்கு வேறு ஏதோ கோபம் இருக்கிறது. அதை தான் இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் பேசப்படுகிறது. அந்த வகையில் விவாகரத்து, உடல்நலம் என அனைத்து பிரச்சனைகளையும் தைரியமுடன் கடந்து வந்த சமந்தா தன்னை பற்றிய இந்த விமர்சனத்தையும் சரியான முறையில் டீல் செய்திருக்கிறார்.

Also read: சமந்தாவுக்கு கெட்ட நேரம் வாட்டி எடுக்கிறது .. சம்பளத்தை கூட எட்டாத சகுந்தலை வசூல்

Trending News