தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும், சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்துள்ளார். அதன் பிறகு தற்போது சமந்தா தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கிறார்.
அத்துடன் கிறிஸ்மஸ் தினத்தில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் அநியாயத்திற்கு ஒல்லியாக எலும்பும் தோலுமாக மாறி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், விவாகரத்து ஏற்பட்ட சோகத்தின் விளைவா? அல்லது அடுத்த படத்திற்காக உடற்பயிற்சி செய்து உடலை இளைத்துள்ளாரா? என்று இணையத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டு குழம்பி தவிக்கின்றனர்.
அத்துடன் அவருடைய ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ஆச்சரியத்துடன் பார்ப்பது மட்டுமல்லாமல், அதிகமாகப் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் சமந்தா நடிக்கும் யசோதா என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இதில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது. சமந்தா தற்போது கதாநாயகியை மையப்படுத்தும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார்.
![samantha-cinemapettai8](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/12/samantha-cinemapettai8.jpg)
அத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ என்ற வெப் சீரிஸ் முதல் மற்றும் இரண்டாவது சீசன் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசனிலும் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவ்வாறு விவாகரத்துப் பெற்ற பிறகு சமந்தா சினிமாவில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி, தொடர்ந்து வெப் சீரியல் மற்றும் படங்களில் நடிப்பதன் மூலம் தன்னை பிஸியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் அவர் உடல் இளைத்ததற்காக அவருடைய ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வருத்தம் தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.