செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சமந்தாவின் ஒரே பாட்டுதான்.. புஷ்பாவில் காணாமல்போன ரஷ்மிகா மந்தனா

பட புரமோஷன் நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் படக் குழுவினருடன் சென்று மேடையில் வித்தை காட்டி தான் ஒரு நேஷனல் பிரஸ் என்பதை நிரூபிக்க போராடிக் கொண்டிருந்த ரஷ்மிகாவுக்கு சமந்தா கொடுத்த மரண அடி பற்றிதான் தற்போது சினிமா வட்டாரமே கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகப் பிரம்மாண்ட பட்ஜெட் டில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் புஷ்பா. மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்த்த நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் முதல் நாள் இந்த படத்தின் வசூல் 71 கோடி என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

புஷ்பா படம் இவ்வளவு பெரிய வரவேற்ப்பை பெறுவதற்கு முக்கிய காரணமே அல்லு அர்ஜுன் தான். ஆனால் அவரையே சமந்தா தூக்கி சாப்பிட்டு விட்டார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். புஷ்பா படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஒரு வருடமாக நடந்து வந்த நிலையில் படம் வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் சமந்தா அந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட போகிறார் என்ற அறிவிப்பு வெளியானது.

சரியாக சமந்தாவும் அப்போதுதான் விவாகரத்து பெற்று இருந்த நிலையில் சமந்தாவின் இந்த கவர்ச்சி ஆட்டத்தை பார்க்க மொத்த இந்திய சினிமாவும் காத்துக் கொண்டிருந்தது என்று சொன்னால் மிகையாகாது. சொன்னது சொன்னபடி புஷ்பா படத்தில் சமந்தாவின் கவர்ச்சி ஆட்டம் அனைவரையும் கவர்ந்துவிட்டது.

rashmika.jpg
rashmika

இதனால் அல்லு அர்ஜுன் மாஸ் போய்விட்டது என்று சொல்லலாம். ஆனால் அதைவிட மோசம் என்னவென்றால் அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நேஷனல் கிரஸ் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ரஷ்மிகா மந்தனா அந்த படத்தில் இருக்கிறாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பிவிட்டது.

இத்தனைக்கும் ஒவ்வொரு புரமோஷன் நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் சென்று நான் தான் இந்த படத்தின் நாயகி என ரசிகர்களை நம்ப வைக்க படாதபாடு பட்டார். ஆனால் சமந்தா ஒரே ஒரு பாட்டில் மொத்தத்தையும் வச்சு செஞ்சுவிட்டார். படம் பார்த்த அனைவருமே சமந்தா பற்றி மட்டும் தான் பேசுகின்றனர், இது படக்குழுவினருக்கே கொஞ்சம் அதிர்ச்சித்தானாம்.

Trending News