புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரு மணி நேரத்தில் 25 லட்சம் சம்பாதித்த சமந்தா.. 200 கோடி வேண்டாம்னு சொன்னது இதுக்கு தானா.!

சமந்தா சமீபத்தில் நாக சைதன்யாவுடன் பிரிவதை உறுதி செய்தார். இதனைப் பார்த்த பலரும் பல்வேறு விதமான கேள்விகளையும், சர்ச்சைகளையும் உருவாக்கினர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சமந்தா பொறுமையாக அனைத்து கேள்விக்கும் பதில் அளித்தார்.

ஆனால் அந்த சர்ச்சை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. சமந்தா என்னுடைய பிரிவு மிகவும் வேதனையாக இருக்கிறது. பலரும் பல்வேறு விதமான சர்ச்சைகளை எழுப்பி வருகிறார்கள். ஆனால் எதுவும் உண்மை இல்லை இந்த பிரிவு வேதனையாக இருந்தாலும் இதிலிருந்து மீள்வது எப்படி என்பதை தான் தற்போது யோசித்து வருவதாக பதிலளித்திருந்தார்.

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்படித்தான் தெலுங்கில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் பல்வேறு விதமான கேள்விகள் கேட்க அதற்கு சமந்தா சரியான பதில்களை அளித்தார்.

ஒரு மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட சமந்தா 25 லட்சம் சம்பாதித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குறுகிய நேரத்திலேயே இவ்வளவு வருமானமா என கூறிவருகின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் பல கோடிகள் சம்பளம் வாங்கும் சமந்தாவிற்கு எல்லாம் இந்த 25 லட்சம் பெரிய விஷயம் இல்லை எனக் கூறுகின்றனர்.

மேலும் இந்த 25 லட்சத்தை என்ன செய்யப்போகிறார் என ரசிகர் கேட்ட கேள்விகளுக்கு புன்னகையுடன் சிரித்துக்கொண்டே நிகழ்ச்சியின் முடிவுக்கு சென்றார். ஒரு பக்கம் வருமானத்தில் கொடிகட்டிப் பறந்தாலும் மற்றொரு பக்கம் வேதனை தாங்க முடியாமல் தவித்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

samantha
samantha

ஏற்கனவே ஜீவனாம்சமாக 200 கோடி தருவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் வேண்டாம் நான் தனியாக சம்பாதிக்கிறேன் என்பது போன்று சமந்தா கூறியிருந்தார். ஒரு மணி நேரத்தில் 25 லட்சம் சம்பாதிக்கும் சமந்தாவிற்கு நடிப்பைத் தாண்டி அறிவுபூர்வமாக நிறைய வெற்றிகளை பார்த்து உள்ளார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

Trending News