புதன்கிழமை, ஜனவரி 22, 2025

விஜய் சேதுபதியுடன் புடவையில் சமந்தா, நயன்தாரா.. இணையத்தில் லீக்கான சூட்டிங் ஸ்பாட் வீடியோ

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துவரும் புதிய படம் காத்துவாக்குல ரெண்டு காதல். போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள் ஆகிய படங்களுக்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் இதுவாகும்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. இவர் கைவசம் தற்போது 20க்கும் மேற்பட்ட புதிய படங்கள் உள்ளன. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் இவர் பிசியாக நடித்துவருகிறார். ஒரே சமயத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிக்க கூடிய திறமையான நடிகர் இவர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா & சமந்தா இருவருடனும் ஜோடியாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்றுவருகிறது.

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு, தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சமந்தா, விஜய் சேதுபதி இருவரும் புதுச்சேரியில் படப்பிடிப்பில் உள்ளநிலையில், இரண்டு நாட்களுக்கு முன் நயன்தாரா புதுச்சேரி சென்று படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூவரும் பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி சென்றுள்ளனர்.

nayanthara-samantha-video
nayanthara-samantha-video

நயன்தாரா, சமந்தா இருவரும் வெள்ளை நிற புடவையில் இருக்க, பின்னணியில் வலையோசை கலகலவென பாடல் ஒளிப்பதுபோல் அந்த வீடியோ உள்ளது.

Trending News