தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கினார். பின்னர் நாக சைதன்யா என்ற தெலுங்கு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகும் சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. மேலும் ஒரு படத்திற்கு 3 முதல் 5 கோடி வரை சம்பளத்தையும் உயர்த்தி விட்டாராம். சமூகவலைதளத்தில் ரசிகர்கள் சமந்தாவை கோபப்படுத்தும் வகையில் அவ்வப்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
நடிகைகள் பெரும்பாலும் பல்வேறு காதல் சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார்கள். அந்தவகையில் சமந்தாவும் முதலில் நடிகர் சித்தார்த்தை காதலித்ததாக தகவல்கள் வெளியானது. இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் பிரபலங்கள் பலரும் கூறியுள்ளனர்.
அதன் பிறகுதான் சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஹைதராபாத்தில் செட்டிலாகியுள்ள சமந்தா பலவருடம் கழித்து தன்னுடைய சொந்த ஊரான சென்னை பல்லாவரத்திற்கு தன்னுடைய குடும்பத்தை பார்க்க வந்துள்ளார்.
அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய முதல் காதல் பிரேக்கப் ஆனதும் இதே பல்லாவரத்தில் தான் என உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய பள்ளிக் கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் சமந்தா. அப்போது பள்ளி பருவ காதல் பிரேக்கப்பை தான் அப்படி சொல்கிறீர்களா? என ரசிகர்கள் அவரது கமெண்ட் பக்கத்தில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலரோ சித்தார்த் மற்றும் சமந்தா இருவரின் காதல் பிரிந்தது இங்கே தான் எனவும் கூறி வருகின்றனர்.