ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

பிள்ள குட்டிங்க கூட விளையாடுற வயசுல செல்ல பிராணிகள் உடன் விளையாடும் சமந்தா.. ட்ரெண்டிங்கில் உள்ள போட்டோ

Samantha : ஒரு காலத்தில் டாப் நடிகர்களின் படங்கள் என்றாலே அதில் கதாநாயகியாக சமந்தா புக் செய்யப்பட்டு வந்தார். அவருக்கு மையோசிட்டிஸ் என்ற அறிய வகை நோய் பாதிக்கப்பட்டதிலிருந்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

ஆனாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். மேலும் விஜய் தேவர்கொண்டா உடன் குஷி படத்தில் நடித்திருந்தார்.

அதற்கு அடுத்தபடியாக சமந்தா நடிப்பில் அமேசான் பிரைம் தளத்தில் சிட்டால் வெப்தொடர் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விரைவில் சமந்தாவுக்கு திருமணம் என்ற செய்தியும் உலாவி கொண்டிருந்தது.

ஆனால் இது பற்றி சமந்தா எதுவுமே வெளிப்படையாக கூறாமல் இருக்கிறார். இந்நிலையில் இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.

அவ்வாறு சமந்தா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அதாவது தன் வீட்டில் செல்லப் பிராணியாக உள்ள நாயுடன் ஹோலி கொண்டாடி இருக்கிறார்.

மேலும் சமந்தா முகத்திலும் கலர் பூசப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், பிள்ள குட்டிங்க கூட விளையாடுற வயசுல செல்லப்பிராணி கூட விளையாடுறீங்களே சாம் என கமெண்ட் செய்துள்ளனர்.

செல்லப்பிராணி நாயுடன் ஹோலி கொண்டாடிய சமந்தா

samantha-holy-celebration
samantha-holy-celebration

Trending News