வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஷாருக்கானை ரிஜெக்ட் செய்த சமந்தா.. நயன்தாரா செகண்ட் option தானாம்

சமந்தா மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக நடித்தார். ஏ மாயா சேசாவே படத்தின் மூலம் டோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதன் பிறகு தமிழிலும், விஜய், சூர்யா, தனுஷ், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார்.

நாக சைதன்யா உடனான விவாகரத்துக்கு பின், உடல் அளவிலும் மனதளவிலும் பல பிரச்சனைகளை எதிர்கொண்ட சமந்தா, சமீபத்தில் ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் என்ற வலைத் தொடரில் நடித்தார். இது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் சமந்தா நடிப்பை எல்லோரும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

ஷாருக்கானை ரிஜெக்ட் செய்த சமந்தா

பாலிவுட் பொறுத்தவரையில் சமந்தா இதுவரை 2 வெப் தொடர்களில் தான் நடித்துள்ளார். தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸுக்கு பின், சமந்தா நடிப்பில் சிட்டாடல் ஹனி பனி எனும் வெப் சீரிஸ் உருவாகி கடந்த வாரம் வெளிவந்தது. ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்து வெளிவந்த சிட்டாடல் வெப் சீரிஸின் ஸ்பின் ஆஃப் தான் இது.

இவருக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் சமந்தா. இது சமீபத்தில் தெரிய வர ரசிகர்கள், “வை சம்மு” என்று குழம்பி போயி கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த 2023ல் வெளிவந்த அந்த படம் உலகளவில் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் படம் தான் அது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சமந்தாவை தான் கேட்டுள்ளார்களாம். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் இப்படத்தை சமந்தா நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

என்ன காரணமாக இருந்தாலும், ஷாருக்கான் படத்தில் நடிக்கமாட்டேன் என்று சொல்லும் தைரியம் எந்த நடிகைகளுக்கும் இல்லை என்றே கூறலாம். ஏன் என்றால் அந்த வாய்ப்புக்காக இன்றளவும் பல பாலிவுட் நடிகைகள் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்க சமந்தாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என்று சொன்னது ஆச்சரியமாக தான் உள்ளது.

Trending News