புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உனக்கு புத்தி இல்லையா? செய்தியாளர்களை கோபித்த சமந்தா!

சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழ் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சமந்தா. இவர்  2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு திரைப்பட நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். இவர்கள் ஹிந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் புரிந்து கொண்டனர்.

பொதுவாகவே மற்ற நடிகைகள் எல்லாம் திருமணம் செய்துகொண்ட பிறகு கணவர், குடும்பம், குழந்தைகள் என பிஸியாகி விடுவார்கள். ஆனால், சமந்தாவுக்கு அப்படி எந்த ஒரு இடையூறும் கிடையாது. அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக சமந்தா ஒர்க்கவுட், கார்டனிங், ஷூட்டிங் என சுதந்திரமாகவும் மற்றும் மிகவும் பிஸியாகவும் உள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது வலைதள பக்கத்தில் தனது ‘சமந்தா அக்கினேனி’ என்ற பெயரை மாற்றி தனது  கணவரான நாகசைதன்யா குடும்பத்தின் பெயரான ‘அக்கினேனி’ அதாவது, ‘சமந்தா அக்கினெனி’ என்று சமூக வலைத்தளத்தில் வைத்திருந்தார். ஆனால், தற்போது சமந்தா அக்கினேனி என்ற பெயரை வெறும் ‘சமந்தா’ என்று மாற்றியுள்ளார். இது மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி, மாமனார் நாகார்ஜுனாவின் பிறந்தநாள் விழாவில் சமந்தா இல்லாதது நெருப்புக்கு எரிபொருளை அதிகரித்தது போல் ஆனது. அதன்பின், நடிகை சமந்தா ‘ஃபேமிலி மேன்-2’ என்ற படத்தில் கொஞ்சம் மோசமாக நடித்திருப்பது, இவர்களது குடும்பத்தில் சற்று விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நாகசைதன்யா சமந்தாவை கண்டித்ததால் கோபத்தில் நடிகை சமந்தா வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பல தகவல்கள் வெளியாகி வந்தன.

actress-samantha-cinemapettai
actress-samantha-cinemapettai

கணவர் நாக சைதன்யாவிடம் இருந்து பிரிந்ததாக வந்த வதந்திகளுக்கு இடையே, சமந்தா திருப்தி கோவிலுக்கு சென்றார். விவாகரத்து வதந்திகள் குறித்து நடிகை சமந்தாவிடம் கேட்கப்பட்டபோது, ‘நான் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளேன் இதுபோன்ற கேள்வி கேட்கும் உனக்கு புத்தி இல்லையா?’ என்று பத்திரிகையாளரிடம் கோபமாக கூறியுள்ளார். இதனால் கோவில் சன்னிதானத்தில் சில மணிநேரம் பரபரப்பு நிலவியது.

Trending News