ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

தரம் பார்த்து 3 விதமா சம்பளத்தை பிரித்து வாங்கும் சமந்தா.. திரிஷா, நயனுக்கு சரியான போட்டி கொடுக்கும் அமுல் பேபி

Samantha Overtakes Trisha, Nayantara: மீண்டும் தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை பிடித்து கோலாட்சி வருகிறார் சமந்தா. ஒரு காலத்தில் வருடத்திற்கு 8 முதல் 10 படங்கள் நடித்து வந்த  சுமந்தாவின் கேரியர் கல்யாண வாழ்க்கைக்கு பின் சற்று தொய்வு விழுந்தது.

தமிழ் சினிமாவை ஆட்சி செய்த சமந்தா, தெலுங்கு சினிமா குடும்பமான நாகர்ஜுனா வீட்டுக்கு மருமகளாக  சென்ற பின் மொத்த வாழ்க்கையும் மாறியது. அவரது சினிமா கேரியர் ஆட்டம் காண ஆரம்பித்தது.

 நாகார்ஜுனா அமலா தம்பதியின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. இந்த திருமணத்திற்கு பல நிபந்தனைகளை போட்டுத்தான் சமந்தாவை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.ஆனால் ஓரிரு வருடங்களிலேயே அவர்கள் காதல் கசந்து இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.

திரிஷா, நயனுக்கு சரியான போட்டி கொடுக்கும் அமுல் பேபி

 இப்பொழுது பழைய மாதிரி சமந்தா சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். கோடிக்கணக்கில் சம்பாதிக்கவும் செய்கிறார். புஷ்பாபு படத்தில் இவர் ஆடிய  நடனத்திற்கு மட்டுமே நான்கு கோடிகள் வரை சம்பளம் பெற்றுள்ளார்.

இப்படி விவாகரத்துக்கு பின் நன்றாக சம்பாதித்து வரும் சமந்தா தன்னுடைய சம்பளத்தை மூன்று விதமாக  பிரித்துள்ளார். தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளிலும்  நடிக்க உள்ளார். இவர் கடைசியாக  விஜய் தேவர் கொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்தார்.

 இப்பொழுது இவர் டாப் நடிகைகளான நயன்தார  திரிஷாவிற்கு இணையாக சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். விளம்பரங்களில் நடிக்க1.5 கோடி முதல் 2 கோடி வரையிலும், திரைப்படங்களில் நடிக்க 7 முதல் 8  கோடிகளிலும், வெப் சீரிஸில் நடிக்க 10 முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

Trending News