திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய் சேதுபதியை காதலித்த டாப் நடிகை.. இது என்ன புது கதையா இருக்கு!

சமந்தா நடிப்பில், சமீபத்தில் வெளியான சிட்டாடல் தொடர் ஓரளவுக்கு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் திரைக்கதையிலும் குறை கூறி இருக்கிறார்களே தவிர,சமந்தா நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டனர்.

இந்த நிலையில், சமந்தா அதிகம் ரசிக்க பட்ட ஒரு கதாபாத்திரமாக கதீஜா கதாபாத்திரம் உள்ளது. காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியான நேரத்தில் எல்லாம் ரசிகர்கள் கதீஜா fever வந்து சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சமந்தா தொடர்பான விடியோக்கள் தான் வைரலாகி வருகிறது. அதற்க்கு காரணம் நாக சைதன்யா திருமணம்

விஜய் சேதுபதியை காதலித்த சமந்தா

நாகசைதன்யா திருமணத்துக்கு வாழ்த்துக்களை விட நெட்டிசன்கள் வெறுப்பை தான் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் சமந்தா எதுவுமே ரியாக்ட் செய்யாமல் இருந்தாலும் கூட stay strong சம்மு என்று கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், சமந்தா முன்பு அளித்த ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் rapid fire கேள்விகள் கேட்கப்பட்டது.

அப்படி சூப்பர்ஸ்டார் பிடிக்குமா கமல்ஹாசன் பிடிக்குமா என்ற கேள்வி கேட்டபோது, சூப்பர்ஸ்டார் என்று பதில் சொன்னார் சமந்தா.

தொடர்ந்து, மணிரத்னம் படங்கள் பிடிக்குமா கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் பிடிக்குமா என்று கேட்டபோது, GVM என்று பதிலளித்தார்.

அடுத்தது சிவகார்த்திகேயன் பிடிக்குமா விஜய் சேதுபதி பிடிக்குமா என்று கேட்டபோது, “நிச்சயமாக விஜய் சேதுபதி தான். pizza படம் பார்த்து நான் அவரை லவ் பண்ணிட்டேன்” என்று கூறியுள்ளார்.

அது என்னவோ கரெக்ட் தான், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துல விஜய் சேதுபதி கூட சமந்தா கெமிஸ்ட்ரி பயங்கரமாக இருக்கும்.. என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News