கடந்த சில நாட்களாகவே சமந்தா தன்னுடைய உடல் எடையில் கவனம் செலுத்துவதால் தொடர்ந்து ஜிம் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்கு பிறகும் அதே முன்னணி நடிகையாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். அதற்கு காரணம் குழந்தை பெற்று கொள்ளாமல் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்துவது தான்.
குழந்தை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம், ஆனால் மார்க்கெட் இருக்கும் போதே முடிந்த வரை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்பதே சமந்தாவின் எண்ணமாம். அதன்படி காதல் கணவரிடம் முறையாக பர்மிஷன் வாங்கித்தான் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறாராம்.
திருமணத்திற்கு பிறகு கட்டுக்கோப்புடன் நடிக்க வேண்டும் என கணவர் இதுவரை கட்டளை போடவில்லையாம். அதனாலேயே சமந்தா தொடர்ந்து சின்னச்சின்ன உடைகளில் ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.
நடிகைகளுக்கு போரடித்தால் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் தொடர்ந்து ஜிம் செல்கிறீர்கள்? என கேட்டுள்ளார். அதற்கு சமந்தா, கணவரின் நடவடிக்கை சரியில்லை என்பதால் அவரை கண்காணிக்க ஜிம்முக்கு செல்கிறேன் என விளையாட்டாக கூறியுள்ளார். விளையாட்டு வினையாகி விடக்கூடாது என வேண்டிக் கொள்கிறார்கள் ரசிகர்கள்.