வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அவ்ளோ தான் லிமிட்டு.. பேசாம இருக்கணும்.. அரசியல்வாதியை எச்சரித்த சமந்தா

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

தற்போது, நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்தார்கள். அது மீண்டும் ஒரு சர்ச்சைக்கு வித்திட்டது என்றே சொல்லலாம். அதுவும் சமந்தா ரசிகர்கள் சோபிதாவை அடிக்காத குறை தான். முக்கியமாக சமந்தா இதற்க்கு ஏதாவது ரியாக்ட் செய்வாரா என்று தான் அனைவரும் எதிர்நோக்கி இருந்தனர். ஆனால், அவர் எப்போதும் போல ஜாலியாக தான் இருந்தார்.

இப்படி பட்ட சூழ்நிலையில், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல, ஒருவர் பேசி இருக்கிறார். இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நிகழ்வு ஒன்றில் தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா, “பல பெண்கள் கே.டி.ஆரின் அராஜகத்தால்தான் விரைவிலேயே திருமணம் செய்துகொள்கிறார்கள். சினிமாவை விட்டும் விலகுகிறார்கள்.”

“போதைப்பொருள்களை உபயோகிக்கும் கே.டி.ஆர். பல பார்டிகளை நடத்துகிறார். அதில் நடிகைகளை தவறாக பயன்படுத்தி மிரட்டுகிறார். அவரால்தான் சமந்தாவுக்கு விவாகரத்து நடந்தது. இது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்” என்றார். இது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதற்கு நடிகர் நாகர்ஜுனா கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். நடிகை சமந்தாவும் பதிலளித்துள்ளார்.

சமந்தா இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “ஒரு பெண்ணாக கிளாமரான இந்த சினிமா துறையில் வந்து பணியாற்றி தனது இடத்தை தக்கவைப்பது என்பது எவ்வளவு பெரியதென உங்களுக்கு தெரியுமா? காதலில் விழுவதும் பின்னர் அதிலிருந்து மீள்வதும்… பின்னர், அதிலிருந்து எழுந்து சண்டையிடுவதும் சாதாரணமானதல்ல. இதற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும் கொண்டா சுரேகா அவர்களே.”

“நான் இந்தப் பயணத்தில் என்னவாகியுள்ளேன் என்பது குறித்து எனக்கு பெருமையாக இருக்கிறது. தயவுசெய்து இதை சிறுமைப்படுத்தாதீர்கள். அமைச்சராக நீங்கள் கூறிய வார்த்தைகளின் கனம் பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மரியாதையாகவும் பொறுப்புடனும் அணுக வேண்டுமென கெஞ்சிக் கேட்கிறேன். மேலும் எங்கள் விவாகரத்து இருவர் சம்மதத்துடன் எடுத்த முடிவு. இதை உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தாதீர்கள்” என்று காரசாரமாக பேசியுள்ளார்.

தற்போது ரசிகரகள் சமந்தாவுக்கு ஆறுதல் கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News