திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

இந்த ஒரு விஷயம் இல்லன்னா எப்போவோ காணாமல் போயிருப்பேன்.. வெற்றியின் ரகசியத்தை உடைத்த சமந்தா!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பணியாற்றி வருகிறார். அதேபோல், சமந்தாவிற்கு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

மேலும் சமந்தா, தெலுங்கு வாரிசு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு, ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆனாலும் தற்போது வரை தன்னுடைய கேரியரை பக்காவாக மெயின்டன் பண்ணி வருகிறார் சமந்தா.

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது வெற்றியின் ரகசியம் இதுதான் என்று தனது சினிமா வாழ்க்கையை பற்றி கூறியிருக்கும் தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

அதாவது நடிகை சமந்தா OTT தளத்தில், ‘சாம் ஜாம்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் தான் சமந்தா தன்னுடைய சினிமா வாழ்க்கையை பற்றி பேசி இருக்கிறாராம்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் சமந்தா, ‘சினிமாவில் ஜொலிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பூசணிக்காய் அளவு திறமை இருந்தால் மட்டும் பத்தாது. கடுகளவு அதிஷ்டமும் வேண்டும் என்று எல்லாரும் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு இரண்டுமே பூசணிக்காய் அளவுக்கு இருந்ததால்தான் குறுகிய காலத்திலேயே நான் ஜொலிக்க தொடங்கினேன்’ என்று கூறியுள்ளாராம்.

samantha-naga-chaithanya-cinemapettai
samantha-naga-chaithanya-cinemapettai

அதேபோல் அந்த நிகழ்ச்சியில் சமந்தா, தன்னைவிட திறமையானவர்கள் அழகானவர்கள் அதிகமாக இருந்தபோதிலும், தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதற்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என்றும், திருமணத்திற்கு பிறகு நல்ல படங்கள் கிடைப்பதற்கும் அந்த அதிர்ஷ்டம் தான் காரணம் என்றும் கூறியுள்ளாராம்.

எனவே, சமந்தா தனது சினிமா வாழ்க்கையை பற்றி கூறியிருக்கும் இந்த தகவல்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Trending News