செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

மாமனாரை சந்தித்த சமந்தா.. செய்தியைக் கேட்டு அதிர்ச்சியான நாகசைதன்யா

சமீப காலமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா பல சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்புக்குப் பின் அவர்களைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

சமந்தாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமந்தா தற்போது தன் முன்னாள் மாமனார் ஸ்டுடியோவுக்கு சென்ற விவகாரம் சோஷியல் மீடியாவில் பரபரப்பாகியுள்ளது.

தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமாக அன்னபூர்ணா என்ற ஸ்டுடியோ ஒன்று உள்ளது. அந்த ஸ்டுடியோவுக்கு நடிகை சமந்தா சென்றுள்ளார். சமந்தா ஏன் அங்கு சென்றார் என்று ரசிகர்கள் பலரும் ஆர்வமாக கேள்வி கேட்டு வந்தனர். விவாகரத்துக்குப் பின் கிடைக்கும் ஜீவனாம்ச தொகையை பற்றி பேசத்தான் அவர் சென்றுள்ளதாக பல யூகங்கள் வெளிவந்தன.

தற்போது அதற்கான உண்மை காரணம் தெரிய வந்துள்ளது. குணசேகரன் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள திரைப்படம் சாகுந்தலம். இந்த படத்திற்காக டப்பிங் பேசுவதற்கு தான் சமந்தா அன்னபூர்ணா ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளார்.

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் காத்துவாக்குல 2 காதல், சாகுந்தலம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர ஹாலிவுட் திரைப்படத்திலும் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

என்னதான் இவரைப் பற்றிய வதந்திகள் பரவி வந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. சமந்தா நாகார்ஜுனா சந்தித்ததாக வெளியான தகவலை கேட்ட நாகசைதன்யா இதற்கு தனிப்பட்ட முறையில் எங்களுக்கு சண்டை இருக்கலாம் ஆனால் அதற்காக தன்னுடைய குடும்பத்தில் யாரையும் பார்க்காமல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனவும் சமந்தா நினைத்தால் தனது குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் நட்பு ரீதியாக பழகலாம் எனவும் கூறியுள்ளார்.

Trending News