திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முன்னாள் கணவனை நினைத்து கண்கலங்கிய சமந்தா… குஷி பட ப்ரோமோஷனில் நடந்த சம்பவம்

நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி குஷி திரைப்படம் தியேட்டரில் ரிலீசாக உள்ளது. இயக்குனர் ஷிவா நிர்வனா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சமந்தா நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் குஷி படக்குழு ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்த போது, விஜய் தேவர்கொண்டாவுடன், நடிகை சமந்தா மேடையிலேயே இப்படத்தில் வெளியான குஷி பாடலுக்கு டூயட் நடனம் ஆடினார். சமந்தாவை அலேக்காக தூக்கி விஜய் தேவர்கொண்டா சசுற்றிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: சமந்தாவை விடாமல் துரத்தும் அந்தப் பிரச்சனை.. மேடையிலேயே உருகிய விஜய் தேவரகொண்டா!

இதனிடையே இப்படத்தின் மற்றொரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை சமந்தா, அவரது முன்னாள் கணவரை நினைத்து கண்கலங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை பிரம்மாண்டமாக கோவாவில் சமந்தா திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவரும் பரஸ்பரமாக கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர்.

இவர்களது விவாகரத்தை இன்று வரை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், திருமணத்துக்கு பின்பும் சமந்தா படங்களில் தொடர்ந்து கமிட்டானது தான் விவாகரத்துக்கு காரணம் என கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு இவர் ஆடிய ஐட்டம் நடனமும் இவர்களது விவாகரத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

Also Read: அலைபாயுதே படத்தை அட்ட காப்பி அடித்திருக்கும் குஷி பட டிரைலர்.. விஜய் தேவர கொண்டா, சமந்தா அல்டிமேட் ரொமான்ஸ்

எது எப்படி இருந்தாலும், பொதுவாக நடிகைகள் விவாகரத்துக்கு பின்பு அடுத்த வாழ்க்கைக்குள் தங்களை தயார்படுத்திக்கொள்வர். ஆனால் நடிகை சமந்தா இன்னும் தனது முன்னாள் கணவரான நாக சைத்தன்யாவை தான் மனதில் வைத்துள்ளார். அதை உணர்த்தும் வகையில் குஷி பட ப்ரோமோஷன் விழாவில் அப்பட்டமாக தனது கண்ணீர் மூலமாகவே நிரூபித்துள்ளார்.

கடந்த 2019 ஆண்டு சமந்தா மற்றும் நாக சைதன்யா நடிப்பில் வெளியான மஜிலி திரைப்படம் மாஸ் ஹிட்டானது. திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் நடித்த இப்படம், சமந்தாவுக்கு பிடித்த படமாக அமைந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பிரியத்தம்மா என்ற பாடலை குஷி பட ப்ரோமோஷன் விழா மேடையில் பாடகி ஒருவர் பாடினார். இந்த பாடலை கேட்டதும் சமந்தா கண்கலங்கி தனது அழுகையை அடக்க முயன்ற காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சமந்தாவுக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல்களை கூறி வருகின்றனர்.

Also Read: 5 டாப் நடிகர் நடிகைகள் சீக்ரெட்டாக குத்திய டாட்டூஸ்.. கணவரின் பெயரை பச்சை குத்திய சமந்தா

Trending News