சமந்தாவுக்கு என்று பெரிய Fan Base உள்ளது. அதுவும் அவரது விவாகரத்துக்கு பிறகு, அது இன்னும் பல மடங்கு அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். சமந்தா நாக சைதன்யா மக்களால் கொண்டாடப்பட்ட காதல் தம்பதிகளாக இருந்தார்கள்.
ஆனால் சில வருடங்களில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்கள் விவாகரத்து பெற்றபோது, தான் சமந்தாவுக்கு புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.
சமந்தாவும் ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து, விவாகரத்துக்கு காரணமே சமந்தாவின் இந்த மாதிரியான செயல் தான். அவரை ஒரு பாடலுக்கு ஆடக்கூடாது என்று நாகர்ஜுனா குடும்பத்தினர் கூறியதையும் மீறி, அவர் ஆட சென்றதால் தான் விவாகரத்து நடந்தது என்று ஆளுக்கு ஒரு புரளியை கிளப்பினார்கள்.
விவாகரத்துக்கு வற்புறுத்தினார்கள்..
இப்படி இருக்க, சில மாதங்களுக்கு பிறகு நாகசைதன்யா அடிக்கடி சோபிதா துளிபலாவுடன் பல இடங்களில் சிக்கியுள்ளார். அப்போது மக்கள் நாக சைதன்யாவுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து சமந்தாவுக்கு ஆறுதலாக குரல்களை எழுப்பினார்கள். மேலும் குஷி படத்தின் நிகழ்ச்சியில், சின்மயி, ப்ரியதமா பாடலை பாடும்போது, சமந்தா கண்கலங்கியது ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது..
சமந்தா இன்னும் move on ஆகவில்லை என்று சொல்லி ரசிகர்கள் சமந்தாவுக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்தார்கள். இப்படி பட்ட சூழ்நிலையில் தான் சமீபத்தில் நாகசைதன்யா, சோபிதா துளிபலா இருவரும் திருமணம் செய்தார்கள். அவர்களது திருமண அறிவிப்பு வந்த நாள் முதல், மிகவும் மோசமாக நாகசைதன்யாவை விமர்சித்து வந்தார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிக்கையாளர் சேகுவேரா சொன்ன தகவல், சமந்தாவுக்கான அன்பை ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு அதிகரித்துள்ளது.