வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பெரிய நடிகர்களை குத்தி கிழிச்ச சமந்தா.. அடுத்தவங்க உழைப்பில் கிடைக்கும் புகழ் தேவை இல்ல

தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் மிகவும் துணிச்சலாகவும், தைரியமாகவும் எதையும் எதிர்கொள்ளும் குணம் உடையவர். சமீபத்தில் இவருக்கு அரிய வகை நோயான ஆட்டோ இம்யூன் இருப்பதை கூட தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளிப்படையாக கூறியிருந்தார்.

மேலும் அதிலிருந்து சீக்கிரம் மீண்டு வருவதாக பதிவிட்டிருந்தார். இவ்வாறு எந்த பிரச்சினையாய் இருந்தாலும் அதை அழகாக சமந்தா எதிர்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் யசோதா படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது.

Also Read :சமந்தா போல் நோயால் பாதிக்கப்பட்ட விஜய் டிவி பிரபலம்.. ஆறுதல் சொல்லி ஆச்சரியப்பட வைத்த சம்பவம்

ரசிகர்கள் மத்தியில் இந்த ட்ரெய்லருக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நிறைய சண்டை காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இதில் நிஜ வாழ்க்கையில் நடப்பது போன்ற சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

இதில் பிரபல சண்டை பயிற்சியாளர் யானிக் பென் பணியாற்றி இருந்தார். அவர் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும்போது சமந்தாவை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். மிகத் துணிச்சல் நிறைந்த சண்டை காட்சிகளில் டூப் வைத்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு சமந்தா மறுத்து விட்டாராம்.

Also Read :விசித்திர நோய்க்கு மருந்து இல்லாமல் தவிக்கும் சமந்தா.. எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது

ஏனென்றால் மற்றவர்கள் உழைப்பில் வரும் புகழ், அந்தஸ்து தனக்கு தேவை இல்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம். மேலும் அந்த சண்டை காட்சிகளை மிகுந்த சிரமப்பட்டு திறம்பட சமந்தா முடித்துள்ளார். தற்போது உள்ள டாப் நடிகர்கள் படத்திலேயே டூப் போடப்படுகிறது. அதாவது ரஜினி, விஜய், அஜித், கமல் என பாரபட்சம் இல்லாமல் எல்லா நடிகர்கள் படத்திலுமே ஹீரோக்கள் கஷ்டப்படும் காட்சிகளில் டூப் போடப்படுகிறது.

சில சமயங்களில் வயது முதிர்வு முதிர்வு காரணமாக அல்லது கால்ஷீட் பிரச்சனை, சண்டை காட்சிகள் ஆகியவற்றில் டூப் தேவைப்படுகிறது. ஆனால் தன் உடல் நிலையில் பிரச்சனை இருந்தும் அதை பொருட்படுத்தாமல் அந்த கஷ்டமான காட்சிகளில் சமந்தா நடித்து டாப் நடிகர்களை குத்தி கிழித்துள்ளார்.

Also Read :சமந்தாவுக்கு ஆறுதல் சொன்ன கொழுந்தனார்.. வைரலாகும் பதிவு

Trending News