புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பீனிக்ஸ் பறவையாய் சிறகடிக்க தயாரான சமந்தா.. மொத்த வலியையும் கண்ணீரால் அலங்கரித்த மேடை

ஒரு மனிதனின் வெற்றியோ, தோல்வியோ, வலியோ, சந்தோசமோ அது இப்போதைய காலகட்டத்தில் வியாபாரமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இது சாமானிய மக்களுக்கு மட்டுமல்ல பிரபலங்களுக்கும் ரொம்பவே பொருந்தும். அப்படித்தான் கடந்த பல மாதங்களாகவே உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமந்தாவின் நிலை மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

அதிலும் அவர் தன்னுடைய பிரச்சனை குறித்தும், அதற்கான வலி, வேதனைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதையே மரணத்துடன் போராடுகிறார் என்றும், எழுந்து நிற்க கூட முடியாமல் தவிக்கிறார் என்றும் திரித்து பேசும் அவலமும் நடந்து வருகிறது. இப்படி அவரைச் சுற்றி நெகட்டிவ் விஷயங்கள் பரவி வந்தாலும் சமந்தா அதையெல்லாம் ஓரம் தள்ளி பீனிக்ஸ் பறவை போல் சிறகடிக்க தயாராகி இருக்கிறார்.

Also read: அழகை இழந்துவிட்ட சமந்தா.. ரசிகரின் கேலி, கிண்டலுக்கு சரியான பதிலடி

அதன் முன்னோட்டமாக தான் அவர் இப்போது சாகுந்தலம் பட விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். பல மாதங்கள் மருத்துவமனை, சிகிச்சை என்று உடலளவில் தளர்ந்து போனாலும் மன உறுதியோடு இருந்த சமந்தா இப்போது தன்னுடைய இலக்கை நோக்கி ஓட தயாராகி இருக்கிறார். ஆனாலும் அந்தப் பட விழாவில் அவர் கண்கலங்கி அமர்ந்திருந்தது பார்ப்பவர்களை ரொம்பவும் பதற வைத்தது.

அந்த கண்ணீரே அவர் அனுபவித்த வலியையும் வேதனையும் சொல்லாமல் சொல்லிவிட்டது. இருப்பினும் அவருடைய தைரியத்தை பார்த்து நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அதனாலேயே இப்போது அவருக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு என பல கருத்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இப்படி ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் அவருடைய அழகு குறைந்து விட்டது என்று கிண்டலாக குறிப்பிடும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Also read: சிகிச்சைக்குப் பின் பிரமோஷனில் கலந்து கொண்ட சமந்தா.. பல பலனு பப்பாளி பழம் போல் மாறிய புகைப்படம்

ஆனால் அதையெல்லாம் பார்த்து சோர்ந்து விடாத சமந்தா தன்னை கிண்டல் அடித்தவரை கூட ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். மேலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு பல பிரச்சினைகள் வந்தாலும் அதை ஒரு நிமிருடன் சமாளித்த சமந்தா இந்த கஷ்ட காலத்தையும் தைரியமாகவே சமாளித்துள்ளார்.

அந்த வகையில் நம் தமிழ் சினிமாவில் சாதித்து காட்டிய எத்தனையோ இரும்புப் பெண்களை பார்த்திருக்கிறோம். ஆனால் திரையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்விலும் பாசிட்டிவாக தைரியமுடன் இருக்கும் சமந்தா மீண்டும் தன்னுடைய கெரியரில் உயர வேண்டும் என்பதுதான் இப்போது ரசிகர்களின் ஆசையாகவும், வாழ்த்தாகவும் இருக்கிறது. விரைவில் மீண்டும் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் சமந்தாவை ரசிகர்கள் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். Be strong, we are with you Sam.

Also read: மேடையில் கதறி அழுத சமந்தா.. அதிர்ச்சியில் படக்குழு

Trending News