திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வினோதமான நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா.. அவரே வெளியிட்ட பதிவால் அதிர்ச்சியில் திரையுலகம்

எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா இடையில் சில நாட்கள் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது. மேலும் அவருக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பது பற்றிய செய்தி சோசியல் மீடியாவில் பரவி வந்தது. ஆனால் அது பற்றி அவர் எந்தவித விளக்கமும் கொடுக்காமல் இருந்தார்.

இந்நிலையில் சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் யசோதா திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்நிலையில் சமந்தா கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு கொண்டிருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.

Also read : நயன்தாரா மார்க்கெட்டை இறக்க சமந்தா செய்த வேலை.. ட்ரெண்டிங்கில் இருக்கும் யசோதா ட்ரெய்லர்

அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த போட்டோவை வெளியிட்டு உருக்கமான பதிவையும் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, யசோதா ட்ரைலருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும் தான் என் வாழ்க்கையில் முடிவில்லாமல் வீசும் சவால்களை சமாளிக்கும் வலுவை எனக்கு கொடுக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மையோசிட்டிஸ் என்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது நான் அதற்கான சிகிச்சையில் இருக்கிறேன். இதிலிருந்து குணமடைந்த பிறகு உங்களுக்கு தெரிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த சிகிச்சை நான் எதிர்பார்த்த நேரத்தை விட இன்னும் அதிக காலம் எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.

Also read : புது மாப்பிள்ளைக்கு திரிஷா போட்ட கண்டிஷன்.. மறைமுகமாக சமந்தாவை குத்தி கிளிச்சுட்டாங்க!

இந்த பிரச்சனையை ஏற்றுக் கொள்வது எனக்கு இன்னும் கடினமாக இருக்கிறது. உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் இந்த விஷயத்தில் எனக்கு நல்ல நாளும், கெட்ட நாளும் இருக்கிறது. சில நேரங்களில் என்னால் இதை தாங்க முடியுமா என்று நினைத்திருந்தேன். இந்த பாதிப்பை ஏற்றுக் கொள்ள நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் நான் விரைவில் குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கையாக கூறியிருக்கின்றனர். இதுவும் கடந்து போகும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். பல நாட்களாக தன்னுடைய உடல்நல பிரச்சனை குறித்து பேசாத சமந்தா தற்போது மனம் திறந்து பேசி இருக்கிறார்.

samantha-actress
samantha-actress

அவருடைய இந்த உருக்கமான பதிவை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் அவர் குணமடைய வேண்டும் என்று ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் எந்த பிரச்சனை வந்தாலும் தைரியமாக இருங்கள் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். சமந்தா வெளியிட்டுள்ள இந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Also read : நிற்க கூட நேரமில்லாமல் கொடிகட்டி பறந்த சமந்தா.. மார்க்கெட் சரியா இதுதான் காரணம்

Trending News