திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விசித்திர நோய்க்கு மருந்து இல்லாமல் தவிக்கும் சமந்தா.. எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சமந்தா சிறு வேடங்களில் நடித்து பின்னர் தமிழ்சினிமாவின் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தார். பின்னர் தெலுங்கு மற்றும் பல மொழிகளில் நடித்து வந்தார். ஆனால் தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வந்த வந்தார். அதன்பின் நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார்.

நன்றாக சென்ற திருமண வாழ்க்கை ஏதோ ஒரு பிரச்சினையினால் விவாகரத்து வரை சென்று பிரிந்து. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் மன தைரியத்துடன் சமந்தா திருமண வாழ்க்கைக்குப் பிறகு சினிமாவை மட்டும் நேசித்து நல்ல வாய்ப்புகளைப் பெற்று முன்னணி நடிகையாக வந்தார்.

Also Read : சமந்தாவுக்கு ஆறுதல் சொன்ன கொழுந்தனார்.. வைரலாகும் பதிவு

இதற்கு அடுத்ததாக ஒரு பிரச்சனை ஏற்கனவே இவருக்கு தோல் சம்பந்தமான ஒரு நோய் இருந்து வந்தது அதனை சரிப்படுத்த சில வருடம் இடைவெளி எடுத்து அதை சரி செய்து பின்னர் நடிக்க வந்தார். இப்பொழுது நன்றாக சென்று கொண்டு இருக்கும் சமந்தா வாழ்வில் மறுபடியும் அந்த நோய் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அந்த நோயின் பெயர் “மயோ சைட்டிஷ்” என்று நோய் தனக்கு வந்துள்ளதாக அவரே புகைப்படத்தை வைத்து டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

இந்த நோயைப் பற்றி மருத்துவர்கள் சில அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது இந்த நோய்க்கு தடுக்கும் மருந்துகள் மட்டுமே உள்ளன அழிக்கும் மருந்துகள் எதுவும் இல்லை. உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகள் மூலமாகவே இதை தற்காலிகமாக தடுத்து முடியும். இந்த நோயின் அறிகுறிகள் தசை வீக்கம், உடல் சோர்வு, உடல் மெலிந்து காணப்படுதல், உணவு உட்கொள்ளாத படி தொண்டை வலி இன்னும் சில அறிகுறிகள் இருக்குமாம்.

Also Read : நயன்தாரா மார்க்கெட்டை இறக்க சமந்தா செய்த வேலை.. ட்ரெண்டிங்கில் இருக்கும் யசோதா ட்ரெய்லர்

இந்த அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தால் கண்டிப்பாக மரணம் ஏற்படும். இந்த நோய்க்கு அளிக்கும் மருந்துகள் இல்லை அதனால் மன தைரியத்துடன் சில விஷயங்களை செய்து வந்தால் ஒரு அளவிற்கு நல்ல முறையில் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவர் கூறிய பிறகு இப்போது அனைவருக்கும் ஒரு பயம் ஏற்படுகிறது.

இருந்தாலும் சமந்தாவிற்கு இருக்கு மனம்தைரியத்தை பற்றி சொல்ல தேவை இல்லை அவர் நடிக்க வந்த புதிதில் இருந்து இன்றுவரை போராட்டத்திலேயே அவர் இன்றுவரை வெற்றி பெற்று வருகிறார். கண்டிப்பாக இந்த நோயினை வெற்றி பெற்று வீடு திரும்புவார் என்று அவர்கள் ரசிகர்களும் மற்றும் திரையுலக முக்கிய நண்பர்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Also Read : புது மாப்பிள்ளைக்கு திரிஷா போட்ட கண்டிஷன்.. மறைமுகமாக சமந்தாவை குத்தி கிளிச்சுட்டாங்க!

Trending News