வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ராஷ்மிகா இடத்தை தட்டிப் பறித்த சமந்தா.. குடியும், கும்மாளமுமாக இளம் ஹீரோவுடன் வெளியான புகைப்படம்

பொதுவாகவே முன்னணி நடிகைகளுக்குள் தொழில் ரீதியாக யார் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்ற போட்டி இருக்கும். அப்படித்தான் இப்போது டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா, சமந்தா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு வாய்ப்புகளை பிடித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்த இரு நடிகைகளுக்கு இடையே ஒரு பஞ்சாயத்து ஆரம்பித்துள்ளது.

அதாவது சமீப காலமாகவே சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவருக்கும் சம்திங் சம்திங் என்ற ரேஞ்சில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரின் நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. அதைத்தொடர்ந்து தற்போது இந்த ஜோடி படப்பிடிப்புக்காக துருக்கி நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.

Also read: எப்புட்ரா, அட்டர் பிளாப்பான சமந்தாவின் படம்.. மகிழ்ச்சியில் திளைக்க வைத்த வெளிநாட்டு சம்பவம்

அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதில் ஒரு போட்டோ பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். அதாவது ஒரு உணவகத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் சாப்பிடுவது போல் ஒரு போட்டோ வெளியாகி இருக்கிறது. அதில் என்ன தவறு இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம்.

ஆனால் அவர்கள் சாப்பிடும் அந்த டேபிளில் சரக்கு பாட்டில் இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வெளிநாட்டில் குடியும் கும்மாளமுமாக இருக்கிறீர்களா என கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இந்த போட்டோ சில சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கிறது. அதாவது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் காதலிப்பதாக பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

Also read: ஐட்டம் டான்ஸராக மாற பல கோடி சம்பளம் கேட்ட தமன்னா.. சமந்தாவை ஓவர் டேக் செஞ்சிருவாங்க போல

அதற்கேற்றார் போல் இந்த ஜோடி சமீபத்தில் மாலத்தீவில் இருந்த போட்டோக்கள் கூட வைரலானது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கம் காட்டுவது எதற்காக என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. இதன் மூலம் ரஷ்மிகா இடத்தை அவர் தட்டிப் பறித்து விட்டார் எனவும் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே அவர் விவாகரத்து, உடல்நல பிரச்சனை என போராடி இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார்.

அதில் இளம் நடிகருடன் அவர் இப்படி நெருக்கமாக இருப்பது அடுத்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. ஏனென்றால் இப்படம் ஆரம்பித்ததில் இருந்தே இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது. அப்போதே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில் தற்போது இந்த போட்டோவும் அந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.

உணவகத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா

samantha-vijay-devarakonda
samantha-vijay-devarakonda

Trending News