புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சமந்தாவுக்கு கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. எதற்காக தெரியுமா.?

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. திருமணத்திற்குப் பின்னரும் மார்க்கெட் குறையாமல் தற்போது வரை தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் திருமணத்திற்கு பின்னர் அதிக அளவில் கவர்ச்சி காட்டி நடித்து வருவதால், தனக்கென நிலையான இடத்தையும், தனி ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார்.

தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் கதை என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். படத்தில் சமந்தாவுடன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தைப் போலவே இப்படமும் காமெடி கலந்த காதல் படமாக உருவாகி வருகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான பேமிலிமேன் வெப்தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பேமிலி மேன் தொடரின் இரண்டாம் பாகமும் வெளியானது. சர்ச்சைகளை தாண்டி இத்தொடரில் நடிகை சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவின் வெப்சீரிஸ் பிரிவில் சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

samantha-vignesh-shivan
samantha-vignesh-shivan

சிறந்த நடிகைக்கான விருது பெற்றதற்காக சமந்தாவை பலரும் பாராட்டி வரும் நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் கதை படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவுக்கு கேக் வெட்டி படக்குழுவினர் சந்தோஷத்தை கொண்டாடியுள்ளனர். விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் உடன் இருக்கும் போது சமந்தா கேக் வெட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

samantha
samantha

Trending News