வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

குழந்தையும் கையுமாக வந்து நின்ற சமந்தா.. என்ன சாம் இதெல்லாம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் பிறகு விவாகரத்து பெற்றுவிட்டார்கள். நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். சமந்தா பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இந்த நிலையில், தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும், சமந்தாவை சீண்டுவதே பல அரசியல்வாதிகளுக்கு சமீபத்தில் ஒரு பொழுதுபோக்காக மாறியுள்ளது. தெலங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா சமந்தா குறித்து அவதூறாக பேசினார். அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த அரசியல் வாதியும் மன்னிப்பு கேட்டார்..

குழந்தையும் கையையுமாக இருக்கும் சமந்தா

சமந்தா நாக சைதன்யா காதல் மிகவும் அழகானதாக இருந்தது. யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை பிரிந்து விட்டனர். திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார். அவருக்கு நாக சைதன்யாவும் முழு சப்போர்ட் செய்ததாக தெரிகிறது. ஆனால் சமந்தாவின் நடிப்பு பயணத்தை நாகார்ஜுனா குடும்பம் விரும்பாததால் சில பிரச்னைகள் ஆரம்பத்தில் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

சூழல் இப்படி இருக்க தாங்கள் விவாகரத்து செய்துகொள்வதாக சில வருடங்களுக்கு முன்பு தங்களது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து அதிர்ச்சி கிளப்பினார்கள். சமந்தா தற்போது, முழுவதுமாக படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த நிலையில், சமந்தா கையில் குழந்தையோடு இருக்கும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது..

கடந்த 8ஆம் தேதி ஆலியா பட் நடித்திருக்கும் ஜிக்ரா படத்தின் ப்ரோமோஷன் நடந்தது. அதில் சமந்தா கலந்துகொண்டார். அப்போது சமந்தாவை ரொம்பவே புகழ்ந்தார் ஆலியா.இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு சின்மயி வீட்டுக்கு சென்ற சமந்தா அங்கு சின்மயின் குழந்தையை தூக்கி கொஞ்சும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள்.. என்ன சாம் இதெல்லாம்.. புது ஜோடி கிடைத்துவிட்டது போலையே… ஒரு குழந்தை இன்னொரு குழந்தையுடன் விளையாடுகிறது என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News