திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சமந்தா முதல் முதலில் வாங்கிய சம்பளம்.. இப்ப கோடியில் வாங்கினாலும், அப்போ இவ்வளவுதான்

சமந்தா தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுவும் புஷ்பா படத்தில் இவர் ஆடிய கவர்ச்சி நடனம் வேற லெவலில் ட்ரெண்டானது.

சமீபத்தில் இவர் மயோசிட்டிஸ் என்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது வரை அந்த நோயில் இருந்து முழுவதுமாக சமந்தாவால் குணமடைய முடியவில்லை. அதற்கான சிகிச்சையை சமந்தா தொடர்ந்து பெற்று வருகிறார்.

Also Read : முன்னேற்றம் அடையாத சமந்தாவின் உடல்நிலை.. அடுத்த கட்ட சிகிச்சைக்காக எடுத்த அதிரடி முடிவு

மேலும் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான யசோதா படம் வசூல் வேட்டையாடியது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தா தான் வாங்கிய சம்பளம் குறித்து பேசி உள்ளார். சாதாரணமாக ஒரு படத்திற்கு சமந்தா தற்போது 5 இருந்து 8 கோடி வரை பெற்று வருகிறார்.

ஆனால் அவருடைய முதல் சம்பளத்தை கேட்டால் பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும். அதாவது சமந்தா பத்தாவது படிக்கும் போதே ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துள்ளார். அங்க அவருக்கு 500 ரூபாய் தான் சம்பளமாக கிடைத்துள்ளதாம். இதுதான் தான் முதன் முதலில் வாங்கிய சம்பளம் என்று சமந்தா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Also Read : திரும்பத் திரும்ப அடிவாங்கும் சமந்தா.. இவருக்கு மட்டும் புதுசு புதுசா எங்கிருந்து பிரச்சனை வருதோ

தற்போது கோடிகளில் புரளும் சமந்தா முதலில் வாங்கிய சம்பளம் 500 ரூபாய் தானா என பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி சமந்தா நாகசைதன்யாவை விவாகரத்து செய்யும் போதும் தனக்கு ஜீவாம்சம் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஏனென்றால் நாக சைதன்யாவை விட சமந்தாவின் சொத்து மதிப்பு அதிகம். மேலும் சமந்தா தன்னுடைய உழைப்பில் வரும் பணத்தை மட்டுமே பயன்படுத்தக்கூடியவர். அதனால் தான் பணத்தாசை இல்லாமல் அடுத்தவர் உழைப்பில் உள்ள சொத்தை நிராகரித்து விட்டார். இந்நிலையில் சமந்தா பூரண குணம் பெற்று மீண்டும் வரவேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Also Read : நான் வீழ்வேனென்று நினைத்தாயோ! சிகிச்சையின் போதே ஜிம் வொர்க் அவுட் போட்டோஷூட் வெளியிட்ட சமந்தா

Trending News