திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சமந்தாவுக்கு கெட்ட நேரம் வாட்டி எடுக்கிறது .. சம்பளத்தை கூட எட்டாத சகுந்தலை வசூல்

ஒரு நேரத்தில் சமந்தாவிற்கு அமோக வரவேற்புகள் மற்றும் அவரது படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து பல போராட்டங்களை கடந்து வந்தார். ஆனாலும் மன தைரியத்துடன் அதே நம்பிக்கையில் பல படங்களில் கமிட்டாகி நடித்தார்.

அப்படி இவர் நடித்து வெளிவந்த படம் தான் சகுந்தலம். இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை ஒட்டி ரிலீஸ் ஆகி திரையரங்கில் ஓடி வருகிறது. ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. மக்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் குறைந்த எண்ணிக்கையில் திரையரங்கில் வெளியானது.

Also read: சாகுந்தலம் மூலம் கம்பேக் கொடுத்தாரா சமந்தா.. படம் எப்படி இருக்கு?

இருப்பினும் எதிர்பார்த்து அளவு வசூல் வரவில்லை. இந்த படத்திற்கு 50 கோடி மொத்தமாக செலவழிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தற்போது வரை ஏழு கோடி கூட எட்டவில்லை. இவ்வளவு பெரிய நஷ்டம் சமந்தாவின் படத்திற்கு ஏற்பட்டதே இல்லை. இதுவே இவருக்கு முதல் முறையாக விழுந்த அடி. ரொம்ப மோசமான வசூலை பெற்று வருகிறது.

அதிலும் இந்த படத்திற்கு சமந்தாவின் சம்பளமே ஆறு கோடிக்கு மேல் வாங்கி இருக்கிறார். ஆனால் அந்த சம்பளத்தை தான் இதுவரை தயாரிப்பாளர் எடுத்து இருக்கிறார். இதனால் தயாரிப்பாளர் பெரிய நஷ்டம் அடைந்து வருகிறார். மேலும் சமந்தாவிற்கு ஏதோ ஒரு கெட்ட நேரம் இருப்பதால் இந்த அளவுக்கு அவரை வாட்டி வதக்குகிறது.

Also read: சமந்தாவை கேவலப்படுத்திய எல்.ஆர். ஈஸ்வரி.. இப்படியா பேசுவது என்ற கோபத்தில் ரசிகர்கள்

ஆனாலும் சகுந்தலம் படம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதே இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்நிலையில் படம் வெளியாகி வந்த நிலையில் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது சமந்தாவிற்கு சினிமா கேரியரில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு விட்டது.

இந்தப் படத்தின் மூலம் மட்டும் அல்ல கொஞ்ச நாளாகவே உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கஷ்டப்பட்டு வந்தவர். இப்பொழுது படத்தின் மூலமும் மிகுந்த வேதனைக்கு ஆளாகி வருகிறார். இதிலிருந்து மீண்டும் மறுபடியும் எப்படி எழுந்து வருவார் என்று அவருடைய ரசிகர்கள் கவலையாக இருந்து வருகிறார்கள்.

Also read: கண்ணாடி புடவையில் கண் கூச வைத்த சமந்தா.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

Trending News