புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ராட்சசன் ஆக மாறிய சம்மந்தி.. குடும்பத்தோடு அசிங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஜனார்த்தனன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வீட்டை விட்டு துரத்தியதால் கதிர் வீட்டில் மொத்த குடும்பமும் தஞ்சம் அடைந்து உள்ளனர். இதனால் முல்லையின் அம்மா கடும் கோபத்தில் உள்ளார்.

அடிக்கடி தனது எரிச்சலை மீனா மற்றும் ஐஸ்வர்யாவிடம் காட்டி வருகிறார். மீனாவுக்கு இந்த சிறிய வீட்டில் இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. இந்நிலையில் புது வீட்டில் சீக்கிரம் குடியேற வேண்டும் என எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். நிலம் வாங்கிய இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சந்தோசமாக இருப்பதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் ராட்சசன் ஆக மாறுகிறார் ஜனார்த்தனன்.

Also Read : முதல புருஷன், இப்ப பொண்டாட்டியா.? டிஆர்பிக்காக விஜய் டிவி பிரபலங்களை கூண்டோடு தூக்கும் சன் டிவி

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள மொத்த ஜாமானையும் லாரியில் ஏற்றி கதிர் விட்டின் முன் விட்டெறிகிறார் ஜனார்த்தனன். இதை பார்த்து மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போகிறது. மேலும் விட்டெறிந்ததில் போட்டோக்கள் எல்லாம் உடைந்து சிதறுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி ஜனார்த்தனனை திட்டுகிறார். எல்லா பொருளும் ரோட்டிலேயே வீசப்பட்டுள்ளதால் அசிங்கப்பட்ட நிற்கிறார்கள். இதனால் வாக்குவாதம் முற்றி போய் தனது மாமனாரை கண்டபடி திட்டுகிறார் ஜீவா. அதான் சாமான் எல்லாம் விட்டறிஞ்சுட்டில்ல முதல்ல இங்கிருந்து போயா என கூறுகிறார்.

Also Read : இந்த வாரம் பிக் பாஸ் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் போட்டியாளர்.. இணையத்தில் கசிந்த ஓட்டிங் லிஸ்ட்

இந்நிலையில் கதிர் இருக்கும் வீட்டில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இருக்கவே இடம் குறைவாகத்தான் உள்ளது. இதில் அங்கிருந்து வந்த பொருட்களை வைக்க இடம் இல்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் கதிர் மற்றும் அவரது குடும்பம் முழித்து வருகிறார்கள்.

இதற்கு ஒரே வழி வேறு வீடு பார்ப்பது தான் என முடிவெடுக்க வாய்ப்புள்ளது. மேலும் புதிய வீடு கட்ட ஏற்பாடு செய்தாலும் அதில் ஏதாவது ஜனார்த்தனன் குடைச்சல் கொடுக்க வருவார். அவற்றையெல்லாம் கடந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எப்படி புதிய வீடு கட்டுகிறது என்பது வரும் வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : பிக்பாஸில் இருந்து விலகும் கமல்.. மொத்த தயாரிப்பாளர் தலையில் இடியை இறக்கிய அதிர்ச்சி சம்பவம்

Trending News