வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சாப்பாட்டை விட எனக்கு எனக்கு அந்த மேட்டர் தான் முக்கியம்.. பொதுவெளியில் சர்ச்சையாக பேசிய சமந்தா

Actress Samantha: பொதுவாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் பேட்டிகள் மற்றும் பொதுவெளியில் பேசும் பொழுது ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும். அவர்களை எதில் சிக்க வைக்கலாம் என்று திட்டமிட்டே தான் கேள்விகள் கேட்கப்படும். இது போன்ற பிளானில் ஒரு சிலர்தான் உஷாராக பேசி அனுப்பி விடுவார்கள்.பலரும் சர்ச்சைகளின் தான் சிக்கி இருக்கிறார்கள்.

அப்படித்தான் நடிகை சமந்தாவும் பொதுவெளியில் சர்ச்சையாக பேசியிருக்கிறார். முன்னணி நடிகைகள் என்றாலே சர்ச்சைகள் தானாக அவர்களை வந்து சேர்ந்துவிடும் . அதிலும் சமந்தா காதலிலிருந்து, திருமணம், விவாகரத்து என அத்தனையுமே சர்ச்சைகள் சூழ்ந்தது தான். சர்ச்சை இருந்தால் தான், மார்க்கெட் அதிகமாக இருக்கும் என அவரும் அதன் போக்கிலே விட்டுவிட்டார்.

சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாட்டில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் தெலுங்கு சினிமா உலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு மருமகளாக சென்றது அப்போதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. நாக சைதன்யா உடன் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்த சமந்தா, புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடி பெரிய சர்ச்சையை கிளப்பினார்.

Also Read:திருமணத்திற்குப் பின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை இழந்த நயன்.. அடுக்கடுக்காக 6 சர்ச்சையில் சிக்க வைத்த விக்கி

பிட்னஸில் அதிக ஆர்வம் கொண்ட சமந்தா உடற்பயிற்சி செய்யும் நிறைய வீடியோக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை கிளப்புவார். சமீபத்தில் தனக்கு மையோசைட்டிஸ் என்னும் தோல் அழற்சி நோய் ஏற்பட்டு இருப்பதாக அறிவித்திருந்தார். சிகிச்சை செய்து கொண்டே சினிமாவில் நடித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் சிகிச்சைக்காக சில காலம் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

சமந்தா பேசிய சர்ச்சை வீடியோ

இப்படி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்த சமந்தா மேடையில் ஏடாகூடமாக பேசி சிக்கி இருக்கிறார். அதாவது தனக்கு சாப்பாடு விட அந்த மேட்டர் தான் முக்கியம் என சொல்லி இருக்கிறார். ஒரு பொது நிகழ்ச்சியில் அவரிடம் உங்களுக்கு சாப்பாடு முக்கியமா அல்லது அந்த மேட்டர் முக்கியமா என அவரிடம் கேள்வி கேட்டு இருக்கிறார்கள்.

அதற்கு பதில் அளித்த சமந்தா எனக்கு சாப்பாட்டை விட அந்த மேட்டர் தான் முக்கியம். நான் சாப்பாடு சாப்பிடாமல் கூட எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இருந்து கொள்வேன் என்று சொல்லி இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு சமந்தா பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

Also Read:ரஜினி, நயன்தாராவை காலி செய்ய விஜய், த்ரிஷா போடும் புது கூட்டணி.. சுயலாபத்திற்காக இப்படி ஒரு வேலையா!

Trending News