வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஒரே கதையை வைத்து பட்டி டிங்கரிங் பார்த்த 6 வெற்றி படங்கள்.. அப்ப யாருமே சொந்தமா யோசிக்கலயா!

தமிழ் சினிமா பல இயக்குனர்கள் வித்தியாச வித்தியாசமான கதையை வைத்து இயக்கி வரும் நிலையில் ஒரு சில இயக்குனர்கள் மட்டும் ஒரே கான்செப்ட்டை வைத்து படங்களை இயக்கிய உள்ளனர். அது என்னென்ன படங்கள் என்பதை பார்ப்போம்.

எமனுக்கு எமன் மற்றும் லக்கி மேன்: இந்த இரண்டு படங்களும் கான்செப்ட் ஒன்றாகத்தான் உள்ளது. அதாவது எமனுக்கு எமன் படத்தில் எமனாகும் தேங்காய் சீனிவாசன் சித்திரகுப்தன் ஆகவும் நடித்திருப்பார்.

அதேபோல்தான் லக்கிமேன் படத்தில் கவுண்டமணி கவுண்டமணி கவுண்டமணி எமனாகவும் செந்தில் சித்திரகுப்தன் ஆகவும் நடித்திருப்பார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் ஒரே கதாபாத்திரத்தை வைத்து தான் வெளியாகின.

சபாஷ் மீனா மற்றும் உள்ளத்தை அள்ளித்தா: சபாஷ் மீனா படத்தில் சிவாஜி சந்திரபாபு ஆகவும் சந்திரபாபு சிவாஜி ஆகவும் ஆள்மாறாட்டம் செய்து நடித்திருப்பார்கள்.

அதே போல் தான் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கார்த்திக் கவுண்டமணி ஆகவும் கவுண்டமணி கார்த்திக் ஆகவும் ஆள்மாறாட்டம் செய்து நடித்திருப்பார்கள்.

நாம் பிறந்த மண் மற்றும் இந்தியன்: நாம் பிறந்த மண் படத்தில் சிவாஜி தனது மகனாக நடித்திருக்கும் கமல்ஹாசன் தவறு செய்வதால் கொன்றுவிடுவார். அதேபோல்தான் இந்தியன் படத்தில் அப்பாவாக நடித்திருக்கும் கமல்ஹாசன் மகனாக நடித்திருக்கும் கமல்ஹாசன் தவறு செய்வதால் தனது மகனை கொன்று விடுவார்.

பாண்டியன் மற்றும் போக்கிரி: பாண்டியன் படத்தில் ரஜினிகாந்த் எதிரிகளை கொள்ளும் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அதேபோல்தான் போக்கிரி படத்தில் எதிரிகளைக் கொல்லும் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருப்பார். இது என்ன ஒரு ஒற்றுமை என்றால் படத்தின் கடைசியாக தான் தெரியும் இவர்கள் இருவரும் போலீஸ் என்பது.

vijay

உள்ளே வெளியே மற்றும் அயோக்கியா: உள்ளே வெளியே படத்தில் பார்த்திபன் எதிரியிடம் பணம் வாங்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். கடைசியாக நல்லவனாக மாறுவார். அதேபோலதான் அயோக்கியா படத்தில் விஷால் எதிரிகளிடம் பணம் வாங்கி இறுதியாக நல்லவனாக மாறுவார்.

சிட்டிசன் மற்றும் சாமுராய்: சிட்டிசன் படத்தில் அஜித் குமார் சமுதாயத்தில் தவறு செய்யும் அதிகாரிகளை கடத்தி சென்று தண்டனை கொடுப்பார். அதே போல் தான் சாமுராய் படத்தில் விக்ரம் தவறு செய்யும் அதிகாரிகளை கடத்திச்சென்று தண்டனை கொடுப்பார். இந்த இரண்டு படங்களும் ஒரே கதையை வைத்து வெளியாகின.

மேற்கண்டவை தவிர ஏய் மற்றும் வேதாளம், பாட்ஷா மற்றும் ஜனா ஆகிய படங்களும் ஒரே கதையை வைத்து தான் வெளியாகின.

Trending News