வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

ஒரே மாதிரி கதையை இரண்டு படங்களாக எடுத்த இயக்குனர்கள்.. எது காப்பி என்று குழம்பிய ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களின் கதைகளைக் காப்பியடித்து காலத்திற்கு ஏற்ற டிரெண்டில் சில இயக்குனர்கள் படங்களை தருகிறார்கள். அந்த படமும் சில நேரங்களில் எதிர்பாராத அளவு வெற்றி பெறுகிறது. அவ்வாறு ஒரே கதையை காப்பியடித்து எடுக்கப்பட்ட திரைப்படங்களைப் பார்க்கலாம்.

வானத்தைப்போல, ஆனந்தம்: விக்ரமன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வானத்தைப்போல. லிங்குசாமி 2001 இல் வெளியான திரைப்படம் ஆனந்தம். இந்த இரு படத்திலும் அண்ணனின் சொல்பேச்சு மீராத மூன்று தம்பிகள் உள்ளனர். இதில் கடைசி தம்பி ஒரு பணக்கார பெண்ணை காதலித்து குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்.

பூவெல்லாம் கேட்டுப்பார், ஜோடி: வசந்த் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பூவெல்லாம் கேட்டுப்பார். பிரவீன் காந்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜோடி. இந்த இரு படங்களிலும் இசைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக சந்தித்து காதலில் விழுந்த ஜோடி பெற்றோர் சம்மதத்திற்காக கதாநாயகன் கதாநாயகி வீட்டிற்கும், கதாநாயகி கதாநாயகன் வீட்டிற்கும் செல்கிறார்கள். பின்பு இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

என்னை அறிந்தால், காக்கி சட்டை: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2015 இல் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காக்கிச்சட்டை. இந்த இரு படங்களிலும் கதாநாயகர்கள் போலீசாக உள்ளார்கள். இந்த இரு படங்களும் உடல் உறுப்பு திருட்டை கருப்பொருளாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது.

24 , இன்று நேற்று நாளை: விக்ரம் குமார் இயக்கத்தில் 2016 இல் வெளிவந்த திரைப்படம் 24. ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இன்று நேற்று நாளை. இந்த இரண்டு படமும் டைம் மிஷின் சப்ஜெக்ட்.

24 படத்தில் டைம் மெஷினை பயன்படுத்தி 24 மணி நேரங்கள் முன்னோக்கியும், பின்னோக்கியும் விரும்பிய நிகழ்வுகளை மாற்றி அமைத்துக் கொள்ள வழிவகை செய்யும். அதேபோல் இன்று நேற்று நாளை படத்தில் பல வருடங்களுக்கு முன்னும், பின்னும் போய் விரும்பிய நிகழ்வுகளை மாற்றி அமைக்க முடியும்.

மாநாடு, ஜாங்கோ: வெங்கட் பிரபு இயக்கத்தில் 2021 இல் வெளியான திரைப்படம் மாநாடு. மனோ கார்த்திகேயன் 2021 இல் வெளியான திரைப்படம் ஜாங்கோ. இந்த இரண்டு படங்களும் டைம் லூப்பை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மாநாடு படத்தில் மாநிலத்தில் முதலமைச்சரை காப்பாற்றவும், மத வன்முறையை தடுக்கவும் ஒரு அரசியல் பேரணி தடுத்து நிறுத்த டைம் லூப் மூலம் முயற்சி செய்கிறார். ஜாங்கோ படத்தில் ஹீரோவின் மனைவி மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள். அதை டைம் லூப் மூலம் தடுக்க முயற்சி செய்கிறார்.

- Advertisement -spot_img

Trending News