நரை முடியுடன் சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்!

மும்பையை சேர்ந்த சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேக்னா என்ற கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதுமட்டுமில்லாமல் விஜய் அவார்ட் விருதுகளுக்காக நாமினேட் செய்யப்பட்டார். அதற்குப் பின்னர் அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை என்று பல படங்களில் நடித்தார்.

ஆனால் தற்போது வரை ரசிகர்கள் அடையாளம் காண்பது என்றால் அது வாரணம் ஆயிரம் மட்டுமே. 2014 ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுடன் சினிமா வாழ்க்கையை முடித்துக்கொண்ட சமீரா ரெட்டி. ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

42 வயதாகும் சமீரா ரெட்டி நரை முடியுடன் கணவனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாரணம் ஆயிரம் மேக்னாவா இது.? என்று ஆச்சரியத்தில் திகைத்து போய் பார்த்து வருகின்றனர்.

sameera-reddy
sameera-reddy