வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

42 வயதில் நீச்சல் உடையில் வாண்டுகளுடன் அலப்பறை செய்யும் வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி.. க்யூட் புகைப்படம்!

ஹிந்தியில் பிரபலமாக இருந்த சமீரா ரெட்டியை 2008ஆம் ஆண்டில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழுக்கு கூட்டி வந்தார் கௌதம் மேனன். முதல் படமே அதிரி புதிரி வெற்றியைப் பெற்றது.

யாவரும் நலம் என்ற டப்பிங் படத்தில் நடித்திருந்தாலும் வாரணம் ஆயிரம் படம் தான் சமீரா ரெட்டிக்கு தமிழ் சினிமாவில் ஒரு சரியான மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தது.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படமே தல அஜித்துடன் அசல் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதனைத் தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார்.

ஆனால் வாரணம் ஆயிரம் படத்திற்குப் பிறகு வேறு எந்த படமும் சமீரா ரெட்டிக்கு சரியான வெற்றியை தராததால் ரசிகர்கள் மத்தியில் அவரது மவுசு மங்கிப் போனது.

இருந்தாலும் இந்தியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிந்தார். கடைசியாக 2013ம் ஆண்டு கன்னட படத்தில் நடித்துவிட்டு பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

sameera-reddy-cinemapettai-01
sameera-reddy-cinemapettai-01

சமீரா ரெடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடுவது, குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படங்களை வெளியிடுவது என பிஸியாகி வருகிறார். அந்த வகையில் கடற்கரையில் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நீச்சலுடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

sameera-reddy-cinemapettai-02
sameera-reddy-cinemapettai-02

Trending News