தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமீரா ரெட்டி இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன அது மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
சமீரா ரெட்டி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்த அதிகமான படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்தனர் ஆனால் இவர் தேர்ந்தெடுத்த கதைகளில் ஒரு சில படங்கள் தோல்வி அடைய அதன் பிறகு பெரிய அளவில் இவர் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் சமீரா ரெட்டி தற்போது தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் மேலும் உடல் எடை அதிகரித்து இருப்பதாகவும் அதனை குறுகிய காலத்தில் குறைந்து விட்டதாகவும் கூறி வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சமீரா ரெட்டி தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் உடற்பயிற்சி செய்வதற்கு பலருக்கும் பல்வேறு காரணமாக இருக்கும் ஆனால் அனைவருக்கும் ஒன்றாக பலன் தருவது ஆரோக்கியம் மட்டும் தான் எனக் கூறியுள்ளார்.
மேலும் தற்போது பல மாதங்களில் உடற்பயிற்சி செய்து தற்போது ஒன்பது கிலோ குறைத்து விட்டதாகவும் இது தற்போது பலன் அளித்துள்ளதாகவும் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த காட்சிகள் தற்போது சமீரா ரெட்டி பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.