Actor Haja Sheriff: பன்முக திறமை கொண்ட விசுவின் படங்களுக்கு குடும்ப ஆடியன்ஸ் அனைவரும் அடிமை தான். பெண்களை போற்றும் விதமாக பல அற்புதமான படைப்புகளை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. அப்படி அவர் இயக்கி நடித்த ஒரு படம் இன்றும் கூட டிவியில் போட்டால் நம்மை பரவசப்படுத்தும்.
அப்படிப்பட்ட படம் தான் சம்சாரம் அது மின்சாரம். அதில் விசு, கோதாவரி வீட்டுக்கு நடுவுல கோட போடு என்று சொல்லும் வசனமே வேற லெவலில் இருக்கும். அந்த படத்தில் அவருடைய கடைக்குட்டி மகனாக பாரதி என்ற கேரக்டரில் நடித்தவர் தான் காஜா ஷெரிப்.
அந்த ஏழு நாட்கள் படத்தில் பாக்யராஜை ஆசானே என்று சுற்றி சுற்றி வரும் குட்டி பையனும் இவர்தான். சிவாஜி, ரஜினி, விஜயகாந்த், கமல் என அனைத்து நடிகர்களுடனும் நடித்த பெருமை இவருக்கு உண்டு. கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்து 200க்கும் மேற்பட்ட விருதுகளை கூட இவர் வாங்கி இருக்கிறார்.
இருந்தும் கூட ஒரு கட்டத்திற்கு மேல் இவர் சினிமாவை விட்டு காணாமல் போனார். அது மட்டும் இன்றி இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வாய்ப்புகளை தவறவிட்டார் என்று கூட ஒரு செய்தி உண்டு. அதனாலேயே நல்ல கலராக ஹீரோ போன்ற தோற்றத்தில் இருந்தும் கூட வாய்ப்புகள் வரவில்லை என்று பேசப்பட்டது.
ஆனால் உண்மையில் உயரம் குறைவாக இருந்ததால் தான் இவரால் ஹீரோவாக நடிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் காஜாவுக்கு காமெடியனாக இருக்கத்தான் பிடித்திருக்கிறது. இதை அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். மேலும் நடித்து நடித்து ஒரு கட்டத்தில் அலுத்து போய் சினிமாவை விட்டு விலகினாராம்.
அதன் பிறகு வெளிநாடுகளுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகளை எல்லாம் நடத்தி இருக்கிறார். ஆனால் அது தெரியாமல் ஊடகங்கள் இவரை குடிகாரர் என்றும் அதனால் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் சித்தரித்துவிட்டது. அதை முற்றிலுமாக மறுத்து இருக்கும் காஜா என்னை பிடிக்காதவர்கள் தான் இப்படி எல்லாம் தவறான கதையை பரப்பி இருக்கிறார்கள் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.