ஒரு நல்ல ஸ்மார்ட்போன் நம் கையில் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாகவும் இருக்கும். அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போனை 399 ரூபாய்க்கு அமேசானில் வாங்கலாம். ஆம் அமேசானில் சில சலுகைகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் போனை வெறும் 399 ரூபாய்க்கு வாங்க முடியும்.
சாம்சங் நிறுவனம் சென்ற ஆண்டின் தொடக்கத்தில் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஏ 12 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த டூயல் சிம் ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 2எம்பி சுத்திகரிக்கப்பட்ட மேக்ரோ கேமரா மற்றும் 2எம்பி டெப்த் கேமரா உள்ளிட்ட குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.
இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை விரிவாக்க முடியும். இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 11 இல் வேலை செய்கிறது. இதில் 6.5 இன்ச் HD + TFT டிஸ்ப்ளே மற்றும் 720 x 1,600 பிக்சல்கள் தீர்மானம் கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போன் 15,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த போனை அமேசான் தளத்தில் வாங்கினால் 13% தள்ளுபடியில் 13,999 ரூபாய்க்கு வாங்கலாம். இதில் சில வங்கிகளின் சலுகையால் ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் குறைக்கலாம்.
அதாவது அக்சிஸ் மைல்ஸ் மற்றும் சில வங்கிகளின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ஆயிரம் ரூபாய் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதனால் ஸ்மார்ட்போனின் விலை 12,999 ஆக குறையும். அமேசானில் எக்ஸ்சேஞ்ச் அஃபர்களும் உள்ளது. இந்தச் சலுகை மூலம் 12,600 வரை சேமிக்கலாம்.
இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையை முழுவதும் நீங்கள் பெற்றால் 12,999 ரூபாயிலிருந்து 12,600 போக மீதமுள்ள 399 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும். இதன் மூலம் 15,999 ரூபாய் உள்ள
சாம்சங் கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போனை வெறும் 399 ரூபாய்க்கு வாங்கலாம். இந்தச் சலுகையை பயன்படுத்தி உடனே சாம்சங் கேலக்ஸி ஏ 12 ஸ்மார்ட்போனை வாங்கி அசத்துங்கள்.