திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இதுவரை 9 படங்கள் இயக்கி சமுத்திரக்கனி சம்பாதித்த லாபம்.. ஐந்து மடங்கு கொட்டிக் கொடுத்த நாடோடிகள்

Director Samuthirakani: தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிகராக குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி. இவர் இதுவரை தமிழ் சினிமாவில் 9 படங்களை இயக்கி இருக்கிறார். அந்தப் படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளியது என்பது தெரிய வந்துள்ளது.

இவர் கோலிவுட்டிற்கு இயக்குனராக அறிமுகமான படம் தான் உன்னை சரணடைந்தேன். 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் 60 லட்சம் பட்ஜெட்டில் உருவாகி, 55 லட்சத்தை தான் வசூலித்தது. இந்த படம் சமுத்திரக்கனிக்கு சரியாக ஓடவில்லை என்று தான் சொல்லணும். தொடர்ச்சியாக அவர் இயக்கிய நெறஞ்ச மனசு படத்தில் கேப்டன் விஜயகாந்தை கதாநாயகனாக வைத்து 5 கோடி பட்ஜெட்டில் எடுத்தார். இந்த படம் ஓரளவு ஓடி 9 கோடி வசூலை தட்டி தூக்கியது.

Also Read: எவ்வளவு பட்டாலும் திருந்தாத சமுத்திரக்கனி.. அக்கட தேசத்தில் மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் பரிதாபம்

அதன் தொடர்ச்சியாக சமுத்திரக்கனியின் சினிமா கேரியரையே புரட்டிப்போட்ட படம்தான் நாடோடிகள். இந்த படம் அவருக்கு ஐந்து மடங்கு லாபத்தை கொட்டிக் கொடுத்தது. ஏனென்றால் 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நாடோடிகள் 18 கோடி வசூலை பாக்ஸ் ஆபிஸில் குவித்தது. இதன் தொடர்ச்சியாக தெலுங்கில் இயக்குனராக கால் பதித்த சமுத்திரக்கனி ‘சம்போ சிவ சம்போ’ என்ற படத்தை ரவி தேஜாவை வைத்து 5 கோடி பட்ஜெட்டில் எடுத்தார். ஆனால் இந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து. 19 கோடி வசூலை பாக்ஸ் ஆபிஸில் நிரப்பியது.

பின்பு சசிக்குமாரை வைத்து சமுத்திரக்கனி இயக்கிய போராளி படம் 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 9 கோடியை வசூலித்து ஆவரேஜ் ஹிட் கொடுத்தது. பின்பு சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படம் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 22 கோடி வசூலை பெற்று ஆவரேஜ் ஹிட் ஆனது. அதன் தொடர்ச்சியாக சமுத்திரக்கனி இயக்கி நடித்த படம் தான் அப்பா.

Also Read: வில்லனாக மாறிய 5 இயக்குனர்கள்.. அக்கட தேசத்திலும் வெளுத்து வாங்கும் சமுத்திரக்கனி

இந்த படத்தில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சாதாரண மனிதன், தன்னுடைய மகனின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் பாசமிகுந்த அப்பாவாக எப்படி எல்லாம் சமுதாயத்தில் போராடுகிறார் என்பதை இந்த படத்தில் விழிப்புணர்வை காட்டினார். இந்த படம் வெறும் 2 கோடி பட்ஜெட்டில் உருவாகி, 12 கோடி வசூலை குவித்து ஆவரேஜ் ஹிட் கொடுத்தது. அதன்பின் சமுத்திரக்கனி இயக்கி நடித்த படம் தான் தொண்டன். இந்த படமும் 3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டு, வலுவான கதைக்களம் இல்லாததால் வெறும் 5 கோடி வசூலை மட்டுமே பெற்று பிளாப் ஆனது.

சமுத்திரக்கனிக்கு நாடோடிகள் படம் கொடுத்த பிளாக் பஸ்டர் ஹிட் காரணமாக அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்தார். ‘நாடோடிகள் 2’ படத்தை ஆசை ஆசையாய் 7 கோடி பட்ஜெட்டில் எடுத்து, எந்தவித லாபமும் இல்லாமல் போட்ட காசை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த படம் வெறும் ஏழு கோடியை மட்டுமே வசூலித்து சமுத்திரக்கனிக்கு எதிர்பார்த்த அளவு கை கொடுக்காமல் பிளாப் ஆனது.

Also Read: சமுத்திரகனியை தூக்கிவிட்டு அழகு பார்த்த 5 படங்கள்.. அப்பாவாக நடித்த அந்த ரெண்டு கேரக்டர்

Trending News