சமீபகாலமாக சமுத்திரக்கனி எந்த படத்தில் நடிக்கிறாரோ அந்த படம் பிரமாண்ட வெற்றியை பெற்று வருவதாக அக்கடதேச நடிகர்கள் நம்புகிறார்களாம். தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கலந்துகட்டி வெற்றிப் படங்களாக கொடுத்து வருகிறார் சமுத்திரக்கனி.
கடந்த வருட துவக்கத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்து தெலுங்கில் வெளியான அளவைகுந்தபுறமுலோ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழிலும் சன் டிவி வைகுண்ட புரம் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டது.
சமுத்திரக்கனியின் குணாதிசயங்களை பார்த்த தெலுங்கு நடிகர்கள் தற்போது சமுத்திரகனியின் ரசிகர்களாக மாறிவிட்டார்களாம். இதனால் சமுத்திரகனி தெலுங்கு தயாரிப்பாளர்கள் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மேலும் தற்போது தெலுங்கில் உருவாகும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் சமுத்திரக்கனி நடித்து வருகிறார். அவ்வளவு ஏன், ராஜமவுலி 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி கொண்டிருக்கும் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் கடந்த பொங்கலுக்கு சமுத்திரக்கனி வில்லனாக நடித்த கிராக் திரைப்படம் தெலுங்கில் வெளியானது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ரவி தேஜா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். மேலும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற கிராக் திரைப்படம் ஆஹா என்ற ஒடிடி தளத்திலும் வெளியாகி 250 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாம். என்னாலும் இல்லாத திருநாளாக தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை அதிகமாக பார்த்துள்ளதுதான் ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாம்.