திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அமீருக்காக குரல் கொடுத்த சமுத்திரக்கனி.. நட்புனா இப்படித்தான் இருக்கணும்

Ameer – Samuthirakani : அமீர் மற்றும் ஞானவேல் இடையே உள்ள பிரச்சனை இப்போது சினிமா பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அடுத்து அமீருக்கு ஆதரவாக இயக்குனர்கள் பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் அமீர், சசிகுமார், சமுத்திரகனி ஆகியோர் ஒரு நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்றைய தினம் அமீருக்கு ஆதரவாக இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆதரவாக ஒரு செய்தியை பதிவிட்டு இருந்தார். அதாவது அண்ணன் அமீர் இயக்குனர் சங்கத்தின் பொறுப்பில் இருந்தபோது பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைத்து இருக்கிறார்.

அவருடைய பிரச்சனையை தீர்க்கும் அளவுக்கு அவருக்கு வல்லமை இருக்கிறது. மேலும் அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரி இறைத்த வன்மையான வார்த்தைகளை இயக்குனர் சங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார். இப்போது சமுத்திரகனியும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Also Read : ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த அமீர்.. 16 வருஷமா துரோகிகளை படிக்க முடியல!

அதாவது ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் ஆனதும், நடிகர் கார்த்தி ஹீரோ ஆனதும் அமீரால் தான். இவ்வாறு ஒரு நன்றி விசுவாசம் இல்லாமல் அமீர் மீது குற்றச்சாட்டு வைப்பது மிகவும் தவறான விஷயம். இவர்களுக்கு எங்கிருந்த இவ்வளவு தைரியம் வந்தது. இதற்கு கார்த்தி அமைதியாக இருப்பது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேலும் சூர்யாவும் பணம் இல்லை படத்தை நீங்களே வைத்துக்கோங்க அண்ணன் என்று அமீரிடம் சொல்லிவிட்டு போய்விட்டார். கடைசியில் அமீர் தான் கடன் வாங்கி படத்தை முடித்தார். அதோடு மட்டுமல்லாமல் நான் பேச வேண்டும் என்று நினைத்தால் இன்னும் நிறைய பேசலாம். பொதுவழியில் தவறாக பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என சமுத்திரக்கனி ஞானவேல் ராஜாவை எச்சரித்திருக்கிறார்.

Also Read : முதல் படமே வெள்ளிவிழா கண்ட 5 தமிழ் நட்சத்திரங்கள்.. இன்று வரை அதே தெனாவட்டில் திரியும் அமீர்

Trending News