கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சமுத்திரக்கனி. தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் அப்பாவாக தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ரைட்டர் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அனைவரும் இப்படத்தின் டிரைலர் குறித்து புகழ்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் சமுத்திரக்கனி சத்தமில்லாமல் செய்த சாதனை குறித்து பேச நாம் மறந்து விட்டோம்.
ஆம் முன்னணி நடிகர்களே ஒரு ஆண்டிற்கு இரண்டு படங்கள் கொடுப்பது அரிதாக உள்ள நிலையில், சமுத்திரக்கனி கணக்கில் அடங்காத அளவிற்கு இந்தாண்டு மட்டும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டு அதாவது 2021 ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சமுத்திரக்கனி நடிப்பில் ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளன.
அவற்றின் பட்டியல் இதோ சித்திரை செவ்வானம், வெள்ளை யானை, உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், ஏலே, தலைவி, சங்கத்தலைவன், வினோதய சித்தம், கிராக், ஆகாஷ்வானி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ரைட்டர், ஆர்ஆர்ஆர், நான் கடவுள் இல்லை, மாறன், டான், அந்தகன், சர்காரு வாரி பட்டா போன்ற படங்கள் வெளியாக உள்ளன.
என்னங்க படிக்கும்போதே மூச்சு வாங்குதா? ஒரு மனுஷனால எப்படி ஒரு வருசத்துல இவ்வளவு படங்களில் நடிக்க முடிந்தது என திரையுலகமே ஆச்சரியத்தில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒன்றிரண்டு படங்களில் நடித்தாலே கால்ஷீட் பிரச்சனை ஏற்படும். ஆனால் இத்தனை படங்களில் கால்ஷீட் பிரச்சனை இல்லாமல் எப்படி நடித்தார் என தெரியாமல் குழம்பி வருகிறார்கள்.